பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 என்ற தகவல் தெரியட்டும். தூதுவர்கள் விரைவிலே வருவார்கள் ! ங் வாடி: இன்னும் எதற்காகக் காத்திருக்க வேண்டும் ? கொடுங்கோலன் மாண்டான் ! சுதந்திரத் திருநாள் உதய மாகிவிட்டது ! ஸ்திரி : ஒவ்வொரு குன்றிலும் ஓங்கி யெரியும் சொக்கப் பனைகளைக் காட்டிலும் தூதுவர்கள் வந்து என்ன சொல்லப் போகிருர்கள் ? வாடி : வாருங்கள் எல்லோரும்! ஆண்களும் பெண்களும் ஓடி வாருங்கள் ! அந்தச் சாரக் கம்புகளைப் பிய்த்தெறியுங் க்ள்! சுவர்களை உடையுங்கள் ! கற்களைக் காற்றிலே வீசுங்கள் ! ஸ்திரி : தோழர்களே, வாருங்கள்! அழுதுகொண்டே கோட்டையைக் கட்டினுேம்-ஆனந்தத்தோடு அதைத் தகர்த்தெறிவோம், வாருங்கள் ! லோரும் : (கட்டடத்தை நோக்கி ஒடிக்கொண்டு) உடையுங் கள்! தகருங்கள் ! தரைமட்டமாக்குங்கள் ! ரிய வால்டர் : நிலைமை மிஞ்சிவிட்டது . இனிக் கட்டுக்கு அடங்காது ! + (மெல்ச்தலும் கோன்ராடும் வருகின்றனர்.) iல்ச்தல் : இன்னுமா கோட்டையை இடிக்கவில்லை ? ஸார் னன். கோட்டையும், ராஸ்பர்க் கோட்டையும் சரிந்து சாம்பலாகிவிட்டனவே ! ரிய வால்டர் : மெல்ச்தலா, அப்பா ? வா, வா விடுதலைச் செய்தி கொண்டுவந்து விட்டாயா ? நாடு முழுதும் எதிரி கள் தொலைந்துவிட்டார்களா ? - ல்ச்தல் : ஆமாம், ஆமாம்! அதில் என்ன சந்தேகம்! ஒரு கொடுங்கோலன்கூட சுவிஸ் நாட்டில் உயிரோடில்லை. ரிய வால்டர் : எல்லாக் கோட்டைகளும் எப்படி விழுந்தன? கேட்கத் துடித்துக்கொண் டிருக்கிருேம் ! ல்ச்தல் : என்னவோ எல்லாம் நன்மையாக முடிந்தது.1 ஸார்னன் கோட்டையை ருடென்ஸ் தகர்த்துத் தீ வைத்து எரித்தார்! ராஸ்பர்க் கோட்டையில் முந்திய நாள் இரவே