பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/569

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

549


நறுமணம் இல்லாமையால் விரும்பிச் சூடப்படவில்லை. அறவே சூடப்படாதது அன்று. சூடும்பூ வகையில் இணைவதும் அன்று. பெரும்பகுதி சூடப்படாமல் விடுக்கப்பட்டமையால் பிறர்க்கு ஒன்று ஈயாது வீழும் உயிரினத்திற்கு உவமையாக, 'பணித்துறைப் பகன்றை நறைக்கொள் மாமலர் சூடாது வைகியாங்கு' -என்றார் ஒளவையார். இருப்பினும் இதன் வெண்மை, மாமலர்' என்னும் பெருமை கருதிக் கள் விற்கும் மகளிர் கண் ணியாகச் சூடி, "பகன்றைக் கண்ணிப் பழையர் மகளி'2 ராக-விளங்கினர். விற்கும் கள் நாற்றத்தோடு இக்கள் தாற்றத்தையும் இழைய வைத்தனர் போலும். ஆயர் குல ஆடவரும் தலையிற் சூடி, 'பகன்றைக் கண்ணிப் பல்லான் கோவல'3 ராக விளங்கினர். சில ஏர்வைத்து உழும் எளிய உழவரும் பகன்றையை மாலையாக்கிக் கதிர் அறுக்குங்கால் அணிந்தனர். வெண்மை திகழும் இம்மாலை, தோய்த்து வெளுத்த கலிங்க ஆடைபோன்று இருந்ததாம்.4 நறுமணமற்ற இம்மலரையும் சூடிய பாங்கை எண்ணுங் கால் தமிழர் மலரில் எத்துணையளவு ஆர்வங்கொண்டிருந்தனர் என்பதையும் தம் வாழ்வில் மலரை எப்பங்கில் வைத்திருந்தனர் என்பதையும் உணரலாம். இப் பகன்றை முன்னே கண்டது போன்று, 'பணித்துறைப் பகன்றை' மேலும், இவர் பகன்றை" , "கொழுங்கொடிப் பகன்றை” என்பவைகளால் இது மருதநிலத்தது; கொடிப் பூ என அறியலாம். இக்கொடி நார் கொண்டது. சற்று வலியது. பாகற்கொடி யையும் இக்கொடியையும் முறுக்கி மாட்டைக் கட்டினர். 1 புறம் : 235 : 18, 19 3 ஐங் : 87 : 1. 2. மலை : 459. 4 பதிற்று : 76 - 12, 18,