பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/739

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



எளிய மலர்கள்.

எளிய நிலையிலும் தகுதிகள்.

மலர்களுக்குள் ஏற்றத் தாழ்வில்லை. எல்லாம் சமமானவை களே. செடியியலாயினும் அறிவியலாயினும் இலக்கியமாயினும் மருந்தியலாயினும் மலர்களை ஒரு நிகர் நோக்கிலேயே கொள்ளும் இவ்வாறிருக்க எளிய மலர்' எவ்வாறு அமையும்? ॐ நெல் உணவளிக்கும் இன்றியமையாப் பொருள். நீர் இன்றி உலகு அமையாது. இவையின்றேல் உயிர் வாழ்வில்லை என்னும் அளவில் இரண்டிற்கும் சிறப்பு உண்டு. இருப்பினும் மற்றொரு தொடர்பில், - 'நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே -எனப்பட்டது. மற்றொன்றுடன் பொருந்தி நோக்கும்போது அரியனவும் எளியன வாகும். இந்தோக்கில், - 'நெல்லும் நீரும் எல்லாசிக்கும் எளிய' என்றது புறம். அரிதிற் கிடைக்கும் சந்தனத்தையும் முத்தையும் நோக்க இவை எளியனவாகக் கொள்ளப்பட்டன. 1. புறம் 186: 1