பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193


'புணர்ந்தவர் முகம்போலப் பொய்கைப் பூ" -புதிதாக மலருமாம். அவற்றுள், ஆம்பலும் குவளையும் பொய்கையில் மட்டும் அன்று, வயலிலும், கேணியிலும் சுனையிலும் மலர்வன. இரண்டிற் கும் பொதுப்பெயர் கழுநீர் என்பது. இப்பெயர், கழு’ என்னும் சொல்லடியாக தோன்றியிருக்கலாம். கழு, நீண்டு வளர்ந்த வேல் போன்று கூர்மை என்னும் பொருளது. இதனால் ஒரு கருவி கழு (கழுமரம்) என்று பெயர் பெற்றுள்ளது. 'நெடுநுதி நீண்ட நுனிக்கூர்மை வயக்கழு ' என்பது பெரும்பாணாற்றுப்படை. இம்மலர்களும் அடியில் தண்டு நீண்டு மேலே வேல்போன்ற தோற்றத்தில் கூர்மையாகக் காட்சி தருவன. பறித்துப் போடப்பட்ட குவளை சாய்ந்து கிடந்ததை "கொழுநுதியிள் சாய்ந்த குவளை' என்னும் நளவெண்பாக் கருத்தும் பொருந்திக் காணத்தக்கது. இவ்வாறு நீரில் தோன்றும் நீர்ப்பூ எனக் கழுநீர்' என்னும் சொல்லமைந்தது. அவ்வாறாயின் நீர்க்கழு’ எ ன் றிரு க்க வேண்டும். நீர்க்கழு என்றால் 'கழு’ என்னும் சொல் முதலில் அந்தக் கருவிக்குக் குறியாகிப் பின்னர் மலருக்கானதாகும். இயற்கைத் தோற்றங்களுக்கே முதலில் சொற்கள் அமைவதால் மலருக்கே முதலில் இப்பெயர் அமைந்திருக்கும். அதனால் கழுநீர் என்பதை 'நீண்டு நுனி கூர்மையான நீர்ப்பூ எனக்கொள்ளல் வேண்டும். ஆம்பல் குவளையைவிடப் பெரிய மலர், குவளை சிறியது. ஆம்பலின் இதழ்கள் குவளையைவிடச் சற்றுத் தடிப்பானவை. குவளை இதழ்கள் பெண்மை போன்று மென்மையானவை. ஆம்பல் ஆடவர் வெடிச்சிரிப்பு போன்று எல்லாப் பற்களையும் காட்டி முழுதும் மலரும். குவளை மகளிரது புன்னகைபோன்று சற்றே இதழ் விரியும். குவளையைப் பெண்கள் கண்ணிற்கே உவமை கூறுவர். இவற்றால் ஆம்பலும் குவளையும் கணவன் மனைவி போன்றவை எனலாம். ஒரு குடும்பம் என்றால் கணவன் மனைவிதானே? - மற்ற வகைகளில் ஒற்றுமையும் கிஞ்சிற்றளவு குவளைக்குச் சிறப்பும் தோன்றும். - 1 கலி 81: 5 ※18