பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158


தாய்க்கொடியில் இருந்து இக் கடிய குணத்தைக் காட்டியது போன்று தனக்குரிய பருவ காலத்தில் இருந்தும்: காட்டும். தலைவன் வரவில்லை. கார்காலம் வந்துவிட்டது. அக் காலம் தலைவியைப் பார்த்துக் கிண்டலாக நகைத்துவிட எண்ணு. கின்றது. நகைக்கப் பல் வேண்டுமே! ... -- 'கொடி முல்லை தொகுமுகை இலங்கு எயிறு (பல்) ஆக நகுமே தோழி நறுந்தண் காரே எனத் தலைவியே. கார்ப்பருவம் காட்டிய பல்லைப் பார்த்து வாடினாள். - முல்லை மென்மையானதுதான். அது பல்லாகும் போது வன்மை பெற்றதாகின்றது. பல்லென்றால் அதற்கென்று கொடிய புலியின் பல்லாக வேண்டியதில்லை. அப்படியும் ஆயிற்று. புலி யென்றால் முல்லையுடன் தொடர்புடைய தென்றல் என்னும் புலி அத்தென்றல் என்னும் புலி கம்பர் பார்வையில், “மன்றல்வாய் மல்லிகை-எயிறு ..................... தென்றல் என்றொரு புலி' -யாகின்றது. இப்பல்லால் ஏற்பட்ட சிரிப்பெல்லாம் ஏளனச் சிரிப்பு: எடுத் தெறியும் சிரிப்பு; ஏற்கத் தகாத சிரிப்பு. பல்லுடைந்த முல்லை தகாத சிரிப்பு தண்டனைக்கு உரியது. அதிலும் பிரிவால் தனித்திருந்து துயரம் கொள்பரை இரக்கமின்னிப் பல்லைக் காட்டிச் சிரித்தபல்லைக் கடுமையாகத்தண்டிக்கவேண்டும், பல்லை உடைக்க வேண்டும். இந்தப் பல் உடைக்கும் பணியை நிறைவேற்றுகிறவர் கருமையான சிறியதாக நீண்ட சம்மட்டி கொண்டவர். மூக்கு நீண்டுள்ள தும்பி என்னும் வண்டினத்தார்தான் இப்பணியைச் செய்தார். அவர் பல்லைக் காட்டிய முல்லைக்கொடியைப் பார்த்து. 'கொல்லை அகடு அணைந்து குறும்பு சேர்ந்து தமியாரை - முல்லை, முறுவலித்து நகுதிச் போலும்’8 -என்று கனைத் தார். அதனால், 1 குறுந் : 126. 2 கம்ப : இலங்கை கேள்விப் புலம் 9, 8 சீன, ஜி: 22: