பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

தமிழ் இலக்கியக் கதைகள்

வந்தவிடுவோமென்று விதைக் கூடையுடன் வயலை நோக்கித் தலைதெறிக்க ஓடினான் அவன்.

“எங்கே அண்ணே ! அவசரமாக விதையும் கையுமாகப் புறப்பட்டு விட்டாற் போலிருக்கிறது. ஆளைப்பாரு ஆளை... வாங்கின கடனைக் கொடுக்க வக்கில்லை விதைக்கப் புறப்பட்டு விட்டார் துரை...ஏன் ஐயா? உனக்கு வெட்கமில்லை? கடன் வாங்கி எத்தனை நாள் ஆகிறது?” ஏகத்தாளமும் கேலியுமாக ஈட்டி குத்துவது போன்ற சொற்களுடன் கடன் கொடுத்த புண்ணியவான் அவனை மறித்துக் கொண்டார். விதைக்கூடையும் கையுமாக வந்து கொண்டிருந்த அவன் ஒன்றும் மறுமொழி கூற முடியாமல் தலை குனிந்தான். எவ்வளவு நேரந்தான் அவன் அப்படி நின்று கொண்டிருந்தானோ? கடன்காரர் இன்னும் ஏதேதோ திட்டிக் கொண்டிருந்தார். அவன் கொட்டுகிற மழையில் விதையுடன் நனைந்து கொண்டே நின்றான். அவர் குடை பிடித்திருந்தார். கடைசியில் உடல் வெடவெடவென்று நடுங்கிய அவன் பொறுமைக்கும் ஓர் எல்லை வந்து சேர்ந்தது. தலை நிமிர்ந்தான் அவன். அவன் கண்கள் கடன்காரரை ஏறிட்டுப் பார்ப்பதற்கு முன் வேறொருவனைக் கண்டன. ஆம்! வெளியூரினனான அவன் நெருங்கிய உறவினன் ஒருவன் வந்து கொண்டிருந்தான். அவன் வாட்டத்தோடு காணப்பட்டான். நெருங்கி வந்ததும் அவன் ஓர் உறவினரின் சாவுச் செய்தி கொண்டு வந்திருக்கிறான் என்பது வெளிப்பட்டது. கடன்காரர் மெல்ல நழுவிவிட்டார். இப்போதும் அங்கே நிற்க அவருக்குப் பைத்தியமா என்ன? செத்தவர் நெருங்கிய உறவு முறையினர். எப்படியும் போய் வரவேண்டும்.

சாவோலை கொண்டு வந்தவனையும் கூட்டிக்கொண்டு வீட்டில் சொல்லிவிட்டு வரப் புறப்பட்டான். வீட்டில் நுழைந்த அவனுக்கு ஒருகணம் மூச்சு நின்று விடும் போலத் திகைப்பு ஏற்பட்டது. அங்கே அவனுடைய மனைவியின் தமக்கை கண்வனுடனும் குழந்தை குட்டிகளுடனும் விருந்தாக வந்து அப்போதுதான் இறங்கியிருந்தாள். அவர்களை வரவேற்றுவிட்டுக் கூடவந்தவனை வாசலில் உட்காரச் சொல்லியபின் கொல்லையில் கொட்டத்திற்குள் ஈன்ற பசு எவ்வாறிருக்கிறதென்று பார்க்கச்