பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



11


ஸ்டாபாச்சர் : ஈவிரக்க மில்லாதது யுத்தம்! சிரித்துக்கொண்டு தொட்டிலில் கிடக்கும் குழந்தையைக்கூட அது மிஞ்ச விடாது!

ஜெர்ட்ருட்: நீங்கள் பின்னே பார்க்காமல், முன்னே பார்க்க வேண்டும்! அதுதான் என் வேண்டுகோள்.

ஸ்டாபாச்சர் : நாங்கள்—ஆண்கள்—களத்திலே மடிகிறோம்:ஆனால், என் அருமை ஜெர்ட்ரூட், உன் கதி என்ன?

ஜெர்ட்ருட் : பலவீனமான அபலைக்கும் ஒரு வழி இல்லாமலா போகும்? அதோ உயரே தெரியும் பாலத்திலிருந்து நீரில் குதித்தால் போகிறது!

ஸ்டாபாச்சர் : (பாய்ந்து அவனைக் கட்டித் தழுவிக்கொண்டு)இந்த வீர உள்ளம் படைத்த நீ பூமியை ஆளும் எந்த அரசனுக்கும் அஞ்சமாட்டாய்! நான் உடனே யூரிக்குப் போகிறேன்; என் நண்பன் வால்டரைப் பார்க்கிறேன். அவன் என் கருத்தறிந்து யோசனை சொல்வதில் வல்லவன். அங்கே செல்வம் மிகுந்த வயோதிகரான வெர்னர் பிரபுவையும் கலந்து பேசுகிறேன். கொடுங்கோலரை நாட்டை விட்டு விரட்டுவதற்கு இருவரும் நல்ல யோசனை சொல்லுவார்கள். நான் வரும் வரையில் நீ இங்கு கவனமாயிரு. வந்த வழிப்போக்கர்களுக்கு வழக்கம் போல் அன்னமளித்து ஆதரித்துக்கொண்டிரு!

[இருவரும் வீடு நோக்கி கடக்கின்றனர். வில்லியம் டெல் கோன்ராடுடன் வருகிருன்.]

டெல் : இனி உனக்கு என் உதவி தேவையில்லை. நல்ல இடத்தில் உன்னைக் கொண்டுவந்து சேர்த்துவிட்டேன். இதுதான் ஸ்டாபாச்சர் வீடு! அண்டினவர்களுக்கு அபயமளிப்பதில் அவருக்கு நிகரில்லை. அதோ, அவரே இருக்கிறார்.

(இருவரும் நெருங்கிச் செல்கின்றனர்.