பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 காட்சி 2 குன்றுகள் சூழ்ந்த ஒரு புல் வெளி. பாறைகளில் உயரேயிருந்து காலேணிகள் தொங்குகின்றன ; அவற்றின் வழியாகக் குடியானவ! கள் பலர் இறங்கி வந்து மைதானத்தில் கூடுகின்றனர். பின்னணி யில் ஏரியும், அதற்கு மேலே ஆகாயத்தில் சில சமயங்களில் ஒரு வானவில்லும் தெரிகின்றன. அப்பால் பணி படர்ந்த குன்றுகள் காட்சியை மறைத்து ஓங்கி நிற்கின்றன. ஏரியும் பனிப்பாறைக் கட்டிகளும் நிலவின் ஒளியில் பளபளவென்று ஒளிர்கின்றன. மெல்ச்தல் : (மேடையில் தோன்று முன்பு) என்னைத் தொடர்ந்து வாருங்கள் இதுதான் சரியான வழி! ரூட்லி வந்து சேர்ந்து விட்டோம்! சுதருத்: இங்கே யாரையும் காணவில்லையே! சேவா ஆளரவமே யில்லை! மெய்யர் யாரும் வரவில்லை, அந்தர்வால்டுக்காரர்களாகிய நாமே முதலில் வந்திருக்கிருேம். மெல்ச்தல்: நேரம் என்ன இருக்கும் ? கோன்ராடு : காவற்கூடத்தில் மணி இரண்டு அடிக்கிருன்! மெல்ச்தல்: யாராவது போய்க் கொஞ்சம் கட்டைகள் கொண்டு வந்து கொளுத்துங்கள், குளிர்காய உதவியா யிருக்கும்! (இரண்டு குடியானவர்கள் போகின்றன .) சேவா இன்பகரமான இரவு! அமைதியான ஏரி நீர் பளிங்கு போல் பிரகாசிக்கின்றது. பர்க்ஹார்ட்: நிலவில் எல்லோருக்கும் பாதை நன்முக, தெரியும். சுதருத் (ஏரியைக் காட்டி) அதோ பாருங்கள் உங்களுக்கு தெரிகிறதா? மெய்யர்: ஆமாம்! வானவில்! நடுநிசியில் இப்படி வாரின் தோன்றும்ா?