பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

7

"அப்படியானால் ஆண் குலத்தைத் தந்தைக்குலம் என்று ஏன் வைத்துக்கொள்ளக்கூடாது?"

”வைத்துக்கொள்ளலாம், தற்கால நாகரிகத்தைக் கை விட்டுக் கற்காலக் காட்டுமிராண்டித்தனத்தைக் கைக் கொண்டால்!”

அவள் மறுபடியும் சிரித்தாள்.

"ஏன் சிரிக்கிறீர்கள்?’ என்று நான் மறுபடியும் கேட்டேன்.

”ஒத்த வயதுடையவர்கள் தமிழ்நாட்டில் நெருங்கிப் பழக வேண்டுமானால் ஒன்று, அவர்கள் உடன் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்; அல்லது கணவன் மனைவியாக இருக்க வேண்டுமாமே?”

”ஆமாம்; தமிழ்நாட்டின் தனிச் சிறப்பு அது. வாழ்க்கை இன்பத்தைத் தமிழர்கள் ஆண் - பெண் உடலில் மட்டும் தேடுவதில்லை அம்மா, உள்ளத்திலும் தேடுகிறார்கள். அத்துடன், உடலும் உடலும் கலந்து காணும் இன்பத்தைவிட உள்ளமும் உள்ளமும் கலந்து காணும், இன்பமே உயர்ந்த தென்றும் உறுதியானதென்றும் அவர்கள் கருதுகிறர்கள்; அதற்காகவே உடன் பிறக்காத ஆண்-பெண் உறவுகளை அவர்கள் வயதுக்குத் தக்கபடி வரையறுத்தும் இருக்கிறார்கள்!"

”அதற்காகச் சிநேகிதனுக்கு ஒரு சிநேகிதன் இருப்பது போல, சிநேகிதிக்கு ஒரு சிநேகிதி இருப்பது போல-சிநேகிதனுக்கு ஒரு சிநேகிதியும், சிநேகிதிக்கு ஒரு சிநேகிதனும் இருக்கக்கூடாதா, என்ன?”

”இயற்கை அதற்கு இடங்கொடுக்காதபோது இருக்கக்கூடாதா, என்ன?” என்று கேட்பதில் என்ன அர்த்தமம்மா, இருக்கிறது?”