பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

அன்பு அலறுகிறது


"வீட்டுக்கு இல்லையடி; இதயத்துக்கு என்று சொல்!” என்றேன் நான், பெருமையுடன்.

அன்று மாலை திருமணத்துக்கு வந்திருந்த விருந்தினர்களையெல்லாம் வழி அனுப்பிவிட்டு-என் தோழிகளையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்-"நாமும் எங்கேயாவது டோய்விட்டு வருவோமா?” என்றார் என் கணவர்.

"போவோமே!" என்றேன் நான். அதற்குப்பின் அன்றைய தினசரியை எடுத்துப் புரட்டிப் பார்த்து விட்டு, "இன்றுள்ள காட்சிகளைப் பார்த்தால் சர்க்கஸ் தான் தேவலை என்று தோன்றுகிறது; நீ என்ன சொல்கிறாய்?" என்றார் அவர்.

"நீங்கள் சொல்வதைத்தான் நான் சொல்வேன்!” என்றேன் நான்.

'எனக்காக நீ மனித ஜன்மத்தை விட்டுவிட்டு ஆட்டு ஜன்மம் எடுத்துவிடக்கூடாது, லலிதா!" என்றார் அவர்.

"அப்படியென்றால்?" என்றேன் நான், ஒன்றும் புரியாதவள் போல.

"மந்தையோடு மந்தையாகச் செல்லும் மந்த புத்தி ஆட்டு ஜன்மத்துக்கு இருக்கலாம், மனித ஜன்மத்துக்கு இருக்கக்கூடாது என்றேன்!”

"சரிசொந்த புத்தியோடு சொல்கிறேன், வாருங்கள் போவோம்!” என்று நான் எழுந்தேன்; அவரும் எழுந்தார். இருவரும் காரை எடுத்துக்கொண்டு கிளம்பிணோம்.