பக்கம்:அவள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



xxix

 

மாலை

குழந்தை, அறையில் ஜன்னலை ஒட்டிய மேடைமீது தனியாக அமர்ந்திருக்கிறாள். வெளியே, உயரத்தில், பறிக்க முடியாததனால் விட்ட செம்பருத்திப் பூக்கள் சிரிக்கின்றன. அவள் கைகள் மடிமீது உறங்குகின்றன. பொம்மை போன்று அவளுடைய செதுக்கிய வார்ப்படம். வெளியே இறங்க ஆரம்பித்துவிட்ட அஸ்தமனக் கோடுகள், நிழல்களுடன் இழைந்து, கூடவே தனித்தும் தெரிகிறது.

வெளியே நிற்கிறேன். ராணியின் ஆலோசனையைக் கலைக்க தைரியமில்லை, மனமில்லை. அத்தனை சிறிய உருவினுள்ளும் யோசனையின் பெரிய உலகத்துக்கு இடம் உண்டோ? என்ன யோசிப்பாள்? அவள் முகத்தில் எந்த சலனமுமில்லை. அதனாலேயே மரியாதைக்குரியவள்

என்னைப் பார்த்துவிட்டாள். அதனால் உள்ளே வருகிறேன்.

"தாத்தா, அம்மா எப்போ வருவா?"

ஷோபா, அவள் பெற்றோர்களைப் பார்க்கப் போயிருக்கிறாள்.

'இதோ வந்துடுவா.'

"அப்பா, எப்போ வருவா?"

கண்ணன் புத்தகங்கள் வாங்கப் பட்டினம் போயிருக்கிறான்.

'இதோ வந்துடுவான்.'

'சின்னியக்கா எப்போ வருவா?’’

காயத்ரி மார்க்கெட்டுக்குப் போயிருக்கிறாள்.

'சீகாந்த் எப்போ வருவான்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/29&oldid=1496092" இலிருந்து மீள்விக்கப்பட்டது