பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அ ணி ந் து ரை

விடுதலை கிடைத்தவுடன் நம் நாட்டுமக்கள் தமது ஆர்வத்தையும் உழைப்பையும் நாடு பல துறைகளிலும் வளம் பெறப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். தொழில் துறையிலும் இலக்கியத் துறையிலும் முன்னேற்றத்தைக் காண்கிறோம், தமிழ் மொழியில் தற்கால வாழ்க்கைக்கு உரிய சிறந்த பல புது இலக்கியப் படைப்புக்களேக் காண்கின்றோம். அவைகளில் சில மேல்நாட்டுக் கலைகளேப்பற்றியும், நாடுகளின் வரலாற்றினைப் பற்றியும், அந் நாடுகள் ஒன்வென்றும் தொழில் துறையிலும் பண்பாட்டிலும் எவ்வன்னம் வளர்ச்சி பெற்று வருகின்றன, என்பதைப்பற்றியும் கூறுகின்றன. இவ்விதம் தமிழ்மொழி வளம்பெறுவது தமிழ் மக்கள் தம் அறிவையும் ஆற்றலையும் பெருக்கி பிற நாட்டு மக்களோப்போல் வாழ ஒரு நல்ல வாய்ப்பு அளிக்கும் என்பது தெளிவு.

ஒவ்வொரு நாட்டிலும் சமுதாய வளர்ச்சிக்குப் பயன்படும் சாதனங்கள் பலவுள. அவற்றில் நூலகம் சிறந்த ஒரு சாதனமாகும். "ஒரு நாட்டின் பண்பு நலன்களை இப்பாரில் உள்ளார்க்குப் பளிங்குபோலப் பளிச்செனக்காட்டும் கண்ணாடிகளே நூலகங்கள்." என்று ஆசிரியர் திரு. அ. திருமலை முத்துசுவாமி கூறுகிறார், இக்கருத்து மிகவும் போற்றத்தக்கது. அமெரிக்கக் குடியரசின் மேன்மை ஓரளவு அந்நாட்டில் ஏற்பட்டுள்ள நூலக இயக்கத்தால்தான் என்று கருதி அந்நாட்டு நூலக வளர்ச்சியைப்பற்றி நண்பர் திரு. திருமலை முத்துசுவாமி "அமெரிக்க நூலகங்கள்" என்ற இந்நூலில் சுருக்கமாக, அனைவரும் புரிந்துகொள்ளும்வண்ணம் தெளிவாக வரைந்துள்ளார். நூலக இயக்கத்தைப்பற்றி நம் தாய்மொழியில் உள்ள நூல்கள் மிகச் சிலவே. அக்குறை கடந்த சில ஆண்டுகளில் நீக்கப்பட்டு வருகிறது. அதில் பெரும் பங்குடையவர்