பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

அறிவுக்கு உணவு



இல்லாதவை எதுவும் கனவில் தோன்றமாட்டா. விமானத்தைக் காணாத ஒருவனுக்கு அது எப்படிக் கனவில் தோன்ற இயலும்?

கே: தமிழ் நாட்டிலே இடத்திற்கிடம் வேறுபட்ட வகையிலே தமிழ் மொழி பேசப்பட்டு வருகிறது! இவ்விதம் ஒரே மொழி பல வகையாகப் பேசப்படுவதற்குக் காரணம் எதுவாயிருக்கக் கூடும்?

வி: இன்று ஒரேநாடாயிருக்கும் தமிழகம் முற்காலத்தில் சேர, சோழ, பாண்டி நாடுகளாயும், அவற்றினுள்ளும் தொண்டைநாடு, கொங்குநாடு முதலான பல தனித்தனி உள்நாடுகளாயும் இருந்தன. அந்த நாடுகளுள் ஒவ்வொன்றிலும் ஒவ்வோர் வகையாக, ஆங்காங்குள்ளவர் பேசி வந்தனர். இதனாலேயே இன்று இடத்திற்கிடம் வெவ்வேறு விதமாகப் பேசப்பட்டு வருகிறது.

கே: இலக்கியத்தை ஒரு பொழுதுபோக்கு என்று சொல்லுகிறார்கள். உங்கள் கருத்து யாது? கலை கலைக்காகவா, அல்லது மக்களுக்காகவா?

வி: கலை, இலக்கியம் என்பவைபற்றி எப்பொழுதும் இரண்டு கருத்துகள் இருத்தல்கூடாது. ஒன்றுதான் இருக்க இயலும்; உண்மையும் அதுதான். கலை கலைக்காக என்று சொல்லுவது மரத்திற்காக மரம், விதைக்காக விதை, பூவிற்காகப் பூ என்பது போலிருக்கிறது பூ என்பது மக்களுக்காக, பூ என்பது மணத்திற் காக என்றுதான் இருக்க இயலும். அதுபோல, கலை வாழ்வதற் காகப் பிறந்தது. இதுபற்றி அறிஞர் உலகத்தில் கருத்து வேற்றுமை இருக்க இயலாது. வாழ்க்கைக்காகக் கலை இருந்தால்தான் அது கலையாகும். மாறுபட்ட கருத்தோடு சொன்னால் அது மாறுபட்ட கருத்துள்ளவர்களின் கருத்து என்றுதான் சொல்லவேண்டும். தமிழைப் பொறுத்தவரை இலக்கியம் வாழ்வின் உயிர்நாடியாகத்தான் இருந்து வருகிறது.

கே: சட்டங்களால் மனிதனை ஒழுக்கமும் தூய்மையும் உடையவ னாகச் செய்ய முடியுமா?

வி: ஒழுக்கத்துக்கும் தூய்மைக்கும் கல்வியும், கேள்வியும் அறிவுமே துணை செய்யும். என்றாலும், சட்டங்களால் திருத்தவேண்டிய மனிதர்களும் நம்நாட்டில் இல்லாமல் இல்லை.