பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 கரியகுய் நின்றவனும், எக்காலத்தும் முதிராத இளம் பிறையையணிந்தவனும்,மேல், கீழ்,நடு என்னும் மூன்று திலேகளிலும் எவ்வேழாக அடுக்கிய பைந்த எல்லா வுலகங்களுமாய் நீக்கமறக் கலந்து விளங்குபவனும் ஆகிய இறைவனேக் கண் டு தெளியும் அறிவு. (அத் தேவர் இருவர்க்கும் அக்காலத்து அரிதாயினும், அவ னது திருவருளேப் பெற்ற) இன்று நம்மைப் போன்ற அடியார்களுக்கு மிகவும் எளிதாயிற்று. எ.று. இன்று-அவனது திருவருள் கிடைக்கப்பெற்ற இன்று, இம் முத்திக்காலத்து என்பது பொருள்; "யானே யுலகென்பன் இன்று (சிவஞான போதம்-உதாரண வெண்பா) என்புழிப்போல. அன்றும் என்புழி உம்மை அளத்தற்குரிய சந்தர்ப்பம் கிடைத்த அப்பொழுதும் எனக் காலத்தின் அருமையைச் சிறப்பித்து நிற்றலின் சிறப்பும் மை. காணும் அறிவு நமக்கு இன்று எளிதே என இயைத்துரைக்க. அறிவானுந் தானே அறிவிப்பான் தானே அறிவா யறிகின்ருன் தானே - அறிகின்ற மெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பார் ஆகாசம் அப்பொருளுந் தானே யவன். (20) இ-ள்: அ றி யு ம் இயல்புடைய ஆன் மாவே யாய் ஒற்றித்து நிற்பவனும் அவனே. (கண்ணும் அதற்கு விளக்கத்தரும் ஞாயிறும் போலப் பொருட் டன்மையால் வேறு நின்று) உயிர்கட்குப் பொருள் களின் இயல்பினே அறிவித்து நிற்பவனும் அவனே. (கண்ணினது ஒளியும் அதனோடு உடன் நின்று கானும் உயிரின் அறிவும் போல) உயிரின் அறிவி னுள்ளே அத்துவிதமாகக் கலந்து உடனிருந்து