பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

viii நேரும்போதெல்லாம் தமிழ்ப்பணி புரிவது இவரது இயல்பு, புலவரை ஆதரிப்பதில் பெரு விருப்புடையவர். சொந்த தந்தை தாயாரைக் கடைசிவரையில் மனம் கோணாது பேணி வந்தார். இம்மைக்கான செல்வம் யாவும் இனிதே பெற்றவர். செல்வன் கழல் எத்தும் செல்வத்தை நாடி இறைவனைப் பொறுமை யுடன் வழிபடுபவர். முப்பான் ஆண்டளவில் தன்னுள் தப்பாமல் பெறவேண்டிய சிவஞானச்செல்வம் பெற முற்பட்டார். சிவதீட்சை பெற்றுச் சிறந்த பெரியோ ரிடத்துச் சிவபூசை செய்யும் பேறு பெற்ருர். பல்வித மான செல்வச்சூழ் நிலையில் வாழும் இவர் சிவபூஜை செய்வதைத் கடப்பாடாக எண்ணி நடப்பது வியப் பல்லவா! எத்துறையில் சென்றாலும் சிந்தையைச் சிவன்பால் வைத்து வழிபாடு செய்கிறார். மணிவிழாக் காட்சி : இம்மை நலம் யாவும் பெற்றவர். அம்மை நலத்திற்கான மணிவிழாத் தலைவரானார். குட நீராட்டும், பலர் பாராட்டும் பெற்றுப் புத்தாடை அணிந்த பொன்னார் மேனியராய்த் தன் மனேவியோடு சிவனும், சத்தியும்போல் காட்சிதந்து மக்கள் சுற்றம் முதலியவர்க்கு ஆசி வழங்கும் நிலையிலுள்ளார். வள்ளுவர் வகுத்த வாழ்க்கை நெறியில் நின்று வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து ஏனைய செல்வர்க்கு முன்மாதிரியாய் விளங்குகிறார். தன்னடைந் தார்க்கு இன்பந்தரும் பொன்னம்பலநாதன் பொற் கழல் ஏத்தி ஆயிரம் பிறைகாணும் பேறு பெற்று வாழ்க! பல்லாண்டு வாழ்க! அவர் குடும்பம் பொற் கோட்டிமயமும் தென் தமிழ்ப் பொதியமும் போல நன்கு வாழியவே!