பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களால் நியமித்துள்ளவற்றை நடத்தி வருகிறாருர், இல்லை என்றுரைப்போர்க்கு இல்லை என்று சொல்லாத இதயமுடையவர். பெருவாழ்வு கிடைத்ததும் பிறந்த ஊரையும் சிறந்த நட்பையும் பெற்றோரையும், மறப்பார் சிலர். பிறந்த ஊரை மறவாதிருக்க மகாசாத்தனார் வரலாறு என்ற நூல் எழுதி அவர் குருவாகிய நா. இராமலிங்கம் பிள்ளை அவர்களால் எழுதப்பெற்ற பதிகத்தையும் அச்சிட்டு வெளியிட்டார். பிறந்த ஊர் செந்நெல் கொழிக்கும் போன்னங்கோவில். அவ்வூரிலே தன் பெரியம்மா இராசாம்பாளாச்சி பேரில் ஒரு உயர்துவக்கப்பள்ளி ஏற்படுத்தி யுள்ளார். சுற்றுப்புறத்திலுள்ளவர்க்கு அப்பள்ளி மிகவும் பயன்படுகிறது. தனக்கு வாழ்வளித்த ஊராகிய ஒரத்தூரை நிலைத்த இடமாகக் கொண்டு திருப்பணி செய்து வருகிறார். தம் உறைவிடமாகிய தில்லையம் பதியிலே தமிழ் மணம் வீசும் பேரவையிலும் சிவமணம் பொலியும் சங்கத்திலும் திருமுறைக்கழகத்திலும் பங்கெடுக்கிறார், பொன்னங்கோயில் பள்ளிக்கு நஞ்சை நிலம் 1/2 ஏக்கர் நன்கொடை வழங்கியுள்ளார். ஒரத்தூர் மருத்துமனைக்கு 1/2 ஏக்கர் புஞ்சைமனையும் காந்தி தொழில் நிலையத்திற்கு ஒரு ஏக்கர் புஞ்சை நிலமும் நன்கொடை வழங்கியுள்ளார். நூல் வெளிடுயிடு : நகராமலை நாட்டார் குடும்பத்திலுள்ள முன்னோரால் எழுதிவைத்த மாட்டு வாகடம் என்னும் சிறு நூலையும் நா. இராமலிங்கம் பிள்ளை அவர்களால் இயற்றப்பெற்ற தில்லை நவமணி மாலையையும், அவர் பால் ஏட்டளவில் இருந்த மெய்ஞ் ஞான சாரம் என்ற நூலையும் அச்சிட்டு வெளியிட்டுத் தம் குருபக்தியை வெளிப்படுத்தினார். இப்படி வாய்ப்பு