பக்கம்:அட்லாண்டிக் பெருங்கடல்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25


 கென நிறைய டாலர்களை வழங்கிற்று. பொருளாதார உதவி என்றும்; பாதுகாப்பு உதவி என்றும் நிறையத் தொகை அளித்தது அமெரிக்கா.

நேடோவை உறுப்பு நாடுகளின் பேராளர்கள் அடங்கிய மன்றம் இயக்கியது. வட அட்லாண்டிக் போர்ப் படையும் ஜெனரல் ஐசன்கோவர் தலைமையில் அமைக்கப்பட்டது. இதில் உறுப்பு நாடுகள் பங்கு பெற்றன. பின்பு மற்ற நாடுகளும் இந்த அமைப்பில் சேரலாயின.

1952-இல் கிரீசும் துருக்கியும் கேடோவில் சேர்ந்தன. 1955 இல் மேற்கு ஜெர்மனி சேர்ந்தது. வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பைப் பொதுவாக அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு எனலாம்.