பக்கம்:அண்டார்க்டிக் பெருங்கடல்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
26

வானிலை நிலைமைகளை உற்று நோக்கல் முதலிய ஆராய்ச்சிப் பணிகளை விஞ்ஞானிகள் செய்வார்கள்

குளிர்ந்த காற்று, நீர் இருந்த போதிலும், பயிர்களும் விலங்குகளும் வெப்ப மண்டலங்களைக் காட்டிலும் துருவப் பகுதியில் மிக விரைவாகப் பெருகுகின்றன.

பறவைகள் கோடையில் அங்கு வருகின்றன. பென்குயின் பறவை வகைகள் பதினெட்டிற்கு மேல் உள்ளன. அவை கூட்டமாக வாழ்கின்றன. பனிக்கட்டியில் முட்டையிட்ட போதிலும், அவை விரைவாகப் பெருகுகின்றன.

மேற் கூறிய செய்திகள் அனைத்தும் டாக்டர் சைப்பிள் கூறியவை ஆகும். 1961 ஆம் ஆண்டு டாக்டர் சைப்பிள், இந்தியாவில் ஆறு வாரம் தங்கிச் சுற்றிப் பார்ப்பதற்காகப் புது டெல்லி வந்தார். அப்பொழுது,மேற்கூறிய செய்திகளைப் பத்திரிகை நிருபர்களுக்கு அல்லது செய்தியாளர் களுக்குக் கூறினர். உலகின் கடைக் கோடிகளை வட, தென் முனைகளை-ஆராய்வது மனித நன்மைக்கே ஆகும் என்றும் அவர் கூறினார்.