பக்கம்:அண்டார்க்டிக் பெருங்கடல்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



6. அண்டார்க்டிகாவில் அமெரிக்கா

உடன்படிக்கை

பன்னிரண்டு நாடுகள் 30 ஆண்டுக் காலத்திற்கு உடன்படிக்கை செய்துகொண்டு, அண்டார்க்டிக் கண்டத்தில் தளங்கள் அமைப்பதில் முனைந்துள்ளன. அதற்காகப் பெருமளவில் பணத்தையும் செலவிட்டுக் கொண்டிருக்கின்றன. உடன்படிக்கை காலம்வரை அதன் நிலப் பகுதிகள் தனக்குத்தான் சொந்தம் என்று உடன் படிக்கையில் கையெழுத்திட்ட எந்தநாடும் உரிமை கொண்டாடுவதற்கில்லை. உடன்படிக்கையின் கட்டாயங்களில் ஒன்று, எந்த நாடும் அண்டார்க்டிக் கண்டத்தில் போர்துறைப் பயிற்சிகளை, ஆராய்ச்சிகளைச் செய்யக்கூடாது. முழு அளவுக்கு விஞ்ஞான ஆராய்ச்சிகளைச் செய்ய வேண்டும் என்பதாகும்.

அமெரிக்க நிலையங்கள்

அண்டார்க்டிக் க ண் ட த் தி ன் ப சி பி க் பகுதியில் நிலையான நிலையங்களை அமைக்க அமெரிக்கா முயன்று கொண்டிருக்கிறது. அவ்வாறு செய்வதற்குக் காரணங்களாவன:

உடன்படிக்கைப்படி யாரும் 30 ஆண்டுக் காலத்திற்கு அண்டார்க்டிக் கண்டத்தின் நிலப்பகுதிகளில் உரிமை கொண்டாடுவதற்கில்லை. கால எல்லை அதிகமிருப்பதால், நிலை