பக்கம்:அண்டார்க்டிக் பெருங்கடல்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4

டம் என்று பெயர். இது நன்னம்பிக்கை முனை யில் அகுலாஸ் நீரோட்டம் என்னும் பெயரைப் பெறுகிறது.

இதிலிருந்து அலை எழுச்சிகள் தொடங்கி, மற்றப் பெருங்கடல்களில் தலைகாட்டுகின்றன.

உயிர்கள்

இக்கடல் உறைந்த போதிலும், அதில் உயிர் கள் வாழ்கின்றன. மேற்பரப்பில் முதன்மையாக டையாட்டம் என்னும் ஓரணு உயிர்கள் உள் ளன. மற்றும், கீழ்நிலைத் தாவரங்களும் காணப் படுகின்றன.

இதன் ஆழமற்ற பகுதியில் கடற் பஞ்சு போன்ற முதுகு எலும்பு இல்லாத உயிர்கள் வாழ் கின்றன. கடற் பூண்டுகள் அதிகம். க ட ல் நாய்கள், நீர் யானை முதலிய விலங்குகளும் உண்டு.

இக்கடலில் மீன்கள் அதிகம். அவை பொருள் வளத்தை அளிக்க வல்லவை.

பலவகைத் திமிங்கிலங்களும் காணப்படு கின்றன. அவற்றில் நீலத் திமிங்கிலம் என்பது 100 அடி நீளமும் 100 டன் எடையும் இருக்கும். இது அண்டார்க்டிக் விலங்குகளிலேயே மிகப் பெரியது.