பக்கம்:அட்லாண்டிக் பெருங்கடல்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38


 பட்டர் மீனிலிருந்து கிடைக்கும் நஞ்சு மிக்க கடுமையானது. ஆனால் அது மருந்தாகப் பயன்படும்பொழுது நன்மை விளைவிக்கிறது. இந்நஞ்சிலிருந்து தயாரிக்கப்படும் எட்ரோடோசின் ஆற்றல் வாய்ந்த வலி நீக்கி. இது ஜப்பானில் அதிக அளவுக்குப் பயன் படுத்தப்படுகின்றது. கடல் பூண்டுகள் கடலில் அதிகம் உள்ளன. இவற்றிலிருந்து கிடைக்கும் காரம் ஆல்ஜின். இது பல வகைப் பொருள்கள் செய்வதில் பயன்படுகிறது. அவையாவன: 1) பொருள்களைச் சுற்றும் தீப்பற்றாத தாள் செய்யப் பயன்படுகிறது. 2) உணவுப் பொருள், மருந்துகள், வண்ணங்கள், வாசனைப் பொருள்கள் ஆகியவற்றில் பயன்படுகிறது. 3) அறுவையின் போது இரத்தக் கசிவை நிறுத்தப் பயன்படுகிறது.