பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 அருணகிரிநாதர் சலம் (754-756) அடைந்து, தலத்தின் பெயருக்கு ஏற்பக் 'குடத்தாமரை” எனப் பதிகம் 1754) தொடங்கிப்பாடினர் . அதில் தேவி விருத்தாம்பிகையை” என தாய்” (என்.-- அ -- தாய்; எனது ஆய்) எனப் பாராட்டியுள்ளார். 755-ஆம் பதிகம் திருமொழி யுரை பெற என்பதில்-தாம் வேண் டிய வாறு உலகோர் யாவருங் காண அருணைத் தலத்திவ் முருக பிரான் ஒரு நொடிப்பொழுதில் காட்சி தந்த அற்புத நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. மேலும் விருத்தாசலத்தில் இறப்பவர்களுக்கு மறுபிறப்பு இல்லை எள்றும், அங்கு முடிவுறும் நல் உயிர்களுக்குத் தேவி தனது முன் தான யால் வீச ஈசன் பஞ்சாகூடிர உபதேசம் செய்வார் என்றும், அக்காரணத்தால் காசியின் மேம்பட்டது விருத்த காசியாம் விருத்தாசலம் என்றும் கந்தபுராணம்-வழி நடைப்படலத்தில் 'துாசில்ை அம்மை வீசித் தொடையின் மேற் கிடத்தித் துஞ் ஆசிலா உயிர்கட் கெல்லாம் அஞ்செழுத் தியல்பு கூறி (சும் ஈசனே தனது கோலம் ஈந்திடும் இயல்பால் அந்தக் காசியின் விழுமிதான முதுகுன்ற வரையுங் கண்டான். எனச் சிறப்பித்துக் கூறப்பட்டுளது. பூநீ சம்பந்தப் பெருமா னும் இத்தலத்துத் தேவாரத்தில் இத்தலத்தை-'முத்தி தரும் உயர் முதுகுன்றம்” (III திரு முறை 99) என விளக்கி யுள்ளார். இத்தலத்துக்குள்ள இம் மேன்மைகளை அருணகிரி யார் முடிபவர் வடிவறு சுசிகர முறை தமிழ் முதுகிரி வலம் வரு பெருமாளே -என்னும் அடியிற் சுருக்கி விளக்கியுள் ளார். so இதில் தமிழ் முதுகிரி என்பது கவனிக்கற் பாலது. ஏழாம் நூற்ருண்டில் பூரீ சம்பந்தப் பெருமான் காலத்தில் தமிழில் முதுகிரி என வழங்கப்பட்ட தலம். 15-ஆம் நூற்ருண்டில் ரீ அருணகிரியார் காலத்தில் விருத்தா சலம் என்னும் வடமொழி நாமத்தால் வழங்கலாயிற்று. இப்படி அனேக தலப் பெயர்களும், சுவாமி - தேவி இவர்களின் பெயரும் தேவார காலத்தில் தமிழில் வழங்கி யன திருப்புகழ்க் காலத்தில் வடமொழியில் வழங்கப் பெறலாயின. தில்லை சிதம்பரம் ஆனதும் இதற்குப் பிறிதோர். உதாரணமாம்.