பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 அருணகிரிநாதர் திறமும் (649), திருவடி திகூைடியால் தம்மைச் சுக ஞானக் கடலில் மூழ்க வைத்து, எட்டிரண்டும்.1 இதுவாம் எனும் மெய்ஞ்ஞானம் போதித்த கருணை மூர்த்தி முருகவேள் என்ப தும் (612, 633, 637), சம்பந்தப் பெருமான் ஞானவாளாற் சமணரை வென்றனர் என்பதும் (650), பரப்பிரம வெளி 'மயிலாடு சுத்த வெளி” என்பதும் (628), இத்தலத்துப் :பாடல்களில் விளக்கப் பட்ட முக்கிய விஷயங்களாகும். மேலும் இத்தலத்தில் பதஞ்சலி, வியாக்ர பாதரும் அரிது இது, அரிது இது என வியக்கும்படி முருகபிரான் அருண கிரியார்க்கு நடன தரிசனம் தந்த காட்சியும் ஒரு பாட வலில் (650). அரிதுயில் சயன வியாள மூர்த்தனு மணி திகழ் மிகுபுலி பூர்வி யாக்ரனும் அரிதென முறை முறை யாடல் காட்டிய பெருமாளே” என விளக்கப்பட்டுளது. இத்தலத்துப் பதிகங்களில் மனப் பாடஞ் செய்யத் தக்க அடிகளாகக் கீழ்க் குறித்த இரண்டை .யுங் கூறலாம்: 1. இறந்திட்டுப் பெறவே கதி யாயினும் இருந்திட்டுப் பெறவே மதி யாயினும் இரண்டிற் றக்கதோ ரூதியம் நீ தர இசைவாயே (631) 2. கழலிணை பணியும் அவருடன் முனிவு கனவிலும் அறியாப் பெருமாளே —(635) சந்த வகையாக இத்தலத்துப் பதிகங்களைப் பற்றிக் கூறப் புகின் 'மருவு கடல் முகில்” என்னும் பெரிய பாடலும் (65:3) தவள சங்கம் போல ஒதுதற்கு இடம் தரும் மெல்லோசை மிக்கநாதம் புரளும் ‘சகுட முந்தும் என்னும் அரிய பாட 1. பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை எட்டினே டிரண்டும் அறியேனையே’- என மணிவாசகர்ை அருளியவாறு அருணகிரியாரும் 'எட்டிரண்டும் அறியாத என்செவி யில், எட்டிரண்டும் இதுவாம் இலிங்கமென, எட்டி ரண்டும் வெளியா மொழிந்த குரு முருகோனே (612) எனத்துதித்து மகிழ்ந்துள்ளார்.