பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.ஆ. பெ. விசுவநாதம்

29



பழகத் தகாதவன்

காதற்கதைகளை எழுதுபவன் சோம்பேறிகளை வளர்ப்பவன். காமக் கதைகளை எழுதுபவன் தீயொழுக்கத்தை வளர்ப்பவன். பலமொழிச் சொற்களைக் கலந்து எழுதுபவன் ஒரு மொழியிலும் பற்றுக் கொள்ளாதவன்; பெருந்தன்மையோடு பழகி அறியாதவன் பேனாவோடு பழகத் தகாதவன்.


போரை விளைவிக்கும்

பிறருடைய கருத்தை உணர மறுப்பதும், பிறருடைய ஆசையை அறிய மறுப்பதும் பிறருடைய உரிமையை ஒப்ப மறுப்பதும் ஆகிய தீக்குணங்களே, மக்களிடையில் போரை விளைவிக்கின்றன.


மக்கள் குணம்

ஒருவனை ஒருவன் அழித்து வாழ்வது விலங்கு குணம். தன்னலங்கருதி உயரப்பறப்பது பறவைக்குணம். தீமைக்குத் தீமை செய்து வாழ்வது தேள், பாம்பு குணம், தீமை செய்யாதவர்களுக்கும் தீமை செய்து வாழ்வது பேய்க்குணம். அவை அனைத்தும் இல்லாதது மக்கட் குணம். தீமை செய்தவர்க்கும் நன்மை செய்து வாழ்வதோ தேவகுணம்.


பெருவியப்பு

வாழப் பிறந்த மக்கள் மாளப்போவது ஒரு வியப்பு. மாள்வதுதான் வாழ்வதற்கு வழி என்ற கூறுவது அதை விட வியப்பு. எல்லாவற்றையும் விடப் பெருவியப்பு மனிதனது அறிவு வளர்ச்சியைக் கொண்டு மனிதனையே அழிக்க முயல்வது.


உணர்வு

அடக்க அடக்க ஒடுங்குவதும் தவறு என்பதை மக்கள் உணர்ந்தால்தான, ஒடுங்க ஒடுங்க அடக்குவதும் தவறு என்பதை ஆள்பவர் உணர்வர்.


சாகும்

சாதியை முன் நிறுத்தினால் சண்டைகள் கிளம்பும். சமயத்தை முன்நிறுத்தினால் பிணக்குகள் ஏற்படும். கட்சிகளை