பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

டில் அதே அம்மையார் ஒரு நிதியும் ஏற்படுத்தினார். அதன்மூலம் இசைக் கலைஞர்கள் கருவிகளைப் பயன்படுத்துமாறு அழைக்கப்பட்டனர்.

இதே அம்மையாரே இசைக் கருவிகளைக் காத்து வைப்பதற்காக கோலிட்ச் இசை மண்டபத்துக்கருகில் ஒரு கட்டடம் கட்டித்தந்தார். அந்தக் கட்டடத்தில் கண்ணாடிப் பெட்டிகளில் இவை காட்சிக்காக வைக்கப்படும். இதே அறையே, இசை மண்டபம் நிரம்பி வழிகையில், இடமற்றவர்கள் உட்கார்ந்து ஒலிபெருக்கி மூலம் இசையை மட்டும் கேட்பதற்குப் பயன்படுத்தப்படும்.

ஒவ்வோராண்டும் பல இசைக் குழுக்கள் வந்து இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி இசைமாரி பொழியும். ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் வானெலிமூலமும் இசைத்தட்டுமூலமும் இந்த இசைவிழா நிகழ்ச்சியின் பாடல்களைக் கேட்டுச் சிந்தை மகிழ்வர். ஒவ்வொரு பருவத்திலும் 30 இசைக் குழுக்களுக்கு ஏற்பாடு செய்வதோடு விட்டல் அம்மையார் சிறந்த இசைக்கலைஞரின் இசைச் சுவடிகளை வாங்குவதற்கும் பொருளுதவி அளித்துள்ளார். இந்த இரண்டு அம்மையாரும் தமக்கு உயிர்கொடுக்கும் கலைக்குத் தொண்டு செய்வதாகவே தங்கள் பணியைக் கருதி வாழ்ந்தனர். அவர்கள் பனம் மட்டும் தரவில்லை. இசையே தம் வாழ்வாக எண்ணித் தம் வாழ்நாளையே தத்தம் செய்தனர்.