பக்கம்:அண்டார்க்டிக் பெருங்கடல்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
39

16,860 மீட்டர் உயரமுள்ள வின்சின் மேசிஃப் ஆகும். இக்கண்டத்தின் மேற்கு முனையிலுள்ள விக்டோரியாலாந்து பகுதிகள் கடல் மட்டத்திற்குக் கீழ் 330 மீட்டர் ஆழத்தில் உள்ளன. ஆனால் அவை 3,300 மீட்டர் தடிமனுள்ள பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ளன என்று அமெரிக்க ஆராய்ச்சி யாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கரையிலுள்ள பணியாறுகளோடு சேர்க்க இக் கண்டத்தின் பனி உறைவு 1710 மீட்டர் தடிமனாகும். அவையில்லாமல் அதன் தடிமன் 1860 மீட்டர் ஆகும்.

கொள்கை

450 ஆண்டுகளுக்கு முன்பு தென்முனை, வெப்பச் சகாராவில் கண்ட நகர்வு விளைவினால் (continental drift) காணப்பட்டது என்னும் ஒரு கொள்கை நிலவுகிறது.

மேலும் நில நடுக்கோட்டிற்குத் தெற்கேயுள்ள கண்டங்கள் மிகப்பெரிய கண்டமான டாண்ட் வானாலாந்தின் பகுதியாக ஒரு காலத்தில் இருந்தன என்னும் கொள்கைக்கும் அண்மைக் காலக் கண்டுபிடிப்புகள் அரவணைப்பாக உள்ளன. அண்டார்க்டிக் கடல், அதன் தரைகள், தரையின் காந்தப்புலம் ஆகியவற்றை ஆராய்ந்ததின் வாயிலாக ஒரு புதுக்கொள்கை உருவாகியுள்ளது. கடல்தரை பரவுகிறது என்பதே அக்கொள்கையாகும்.

தட்ப வெப்பநிலை

பயங்கரக் காற்றுகள், கடுங்குளிர், பனிப்புயல் முதலிய இயற்கைக் கொடுமைகளுக்கு எதிராக