பக்கம்:அண்டார்க்டிக் பெருங்கடல்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
43

நீரை அது தாங்கவல்லது. உலகின் தண்ணிர்ப் பஞ்சத்தை அது நீக்கும்.

கனி வளம்

1973-இல் ராஸ் கடலில் ஈத்தேன் மீத்தேன் இருப்பதற்குரிய அறிகுறிகள் கண்டுபிடிக்கப் பட்டன. இயற்கை வாயுவும், எண்ணெய்ப் படிவு களும் இருப்பதற்கு இவையே அறிகுறிகள். அண் டார்க்டிக் கண்டத் திட்டுகளில் 45 மில்லியன் பீப் பாய்கள் எண்ணெயும், 115 டிரில்லியன் இயற்கை வாயும் உள்ளன என்று அமெரிக்க நில அமைப்பு அளவைத் துறையினர் உறுதி செய்துள்ளனர். கடற்படுகையின் பெரிய பகுதிகளில் மாங்கனிஸ் முண்டுகள் கோலிக்குண்டு அளவிலிருந்து காற்பந்து அளவுவரை உள்ளன.

பனிக்கட்டி இல்லாத மலைகளை நில அமைப்பு நூல் அறிஞர்கள் ஆராய்ந்துள்ளனர். அண்டார்க்டிக்கில் இத்தகைய மலைகளின் பரப்பு 70,000 சதுர கிலோ மீட்டர். தங்கம், பெரிலியம், வயிரங்கள், இரும்புத்தாது, செம்பு, நிக்கல் தாது, கதிரியக்கக் கனிப் பொருள்கள், மைக்கா, பாறைப் படிகம், கிராபைட் முதலியவை இங்குக் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களாகும். வெடல் கடல், ராஸ் கடல் ஆகியவற்றிற்கிடையே உள்ள மணற்கல் பகுதிகளில் எண்ணெய் கிடைக்க வாய்ப்புள்ளது. மாலிப்டினம், காரீயம், துத்தநாகம் முதலியனவும் கிடைக்க நல் வாய்ப்புள்ளது.