பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

இடத்தையும் படிக்கப் பயன்படுத்தமுடியும். மைக்கூடுகள் கொண்டுசெல்ல முடியாது. ஊற்றுப்பேணா மை வாயிலிலேகிடைக்கும். பொதுப் படிப்பகத்தின் பக்கங்களிலே நாற்காலிகளைப் பயன்படுத்தக்கூடாது. நூலக நூல்களைச் சிதைப்பவரும், அதிலே பலவிதமாக எழுதுவோரும், கோடிழுப்பவரும் கடுந்தண்டனை கொடுக்கப் படுவர். சிறைத் தண்டனைகூட அவர்கட்குக் கிடைக்கும். எப்பொழுதும் அமைதியே நூலகத்தில் நிலவல் வேண்டும்.

உடமைகள்

நாம் நூலகத்துள்ளே கொண்டுவரும் உடமைகளுக்கு நூலகம் பொறுப்பன்று. நூலகத்துள் கொண்டு வரும் எல்லாப் பொருள்களும் நுழை வாயிலிலேயே பதியப்படும். எது தொலைந்தாலும் உடனே அதனை நூலக அதிகாரிகட்கு அறிவித்துவிட வேண்டும்.

முன்னேற்றக் கருத்துக்கள்

நூலகத்தை முன்னேற்றற்குரிய அறிவுரைகளும் கருத்துக்களும் மகிழ்ச்சியோடு நூலக அதிகாரிகளால் வரவேற்கப்படுகின்றன. நூல் வாங்கல், சேர்த்தல், வழங்கல், புதுக்கல், பெருக்கல் முதலிய பல துறைகளிலும் முன்னேற்றம் ஏற்படுதற்கு வேண்டிய கருத்துக்களை நாம் தாராளமாக வழங்கலாம்.

காங்கிரசு நூலகத்திலே ஆராய்ச்சிக்களிக்கப்படும்

தனிச் சலுகைகள்

ஆராய்ச்சி திறம்படச் செம்மையாக நடைபெறுவதற்குத் தேவையான நூல்களையும் தனி அறைகளையும் பிற சலுகைகளையும் காங்கிரசு நூலகம் தாராளமாக