பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாமலை என்னும் 34



7. நல்லதொரு குடும்பம்

ஒரு மனிதன் வாழுங் காலத்தில் போற்றப்படுவதை விட-

அவன் மறைந்தபின் எத்தனை காலம் வாழ்கிறான் என்பதுதான் பெருமைக்குரிய விஷயம்!

அண்ணாமலைச் செட்டியாரின் தந்தை முத்தையா செட்டியார் செல்வந்தராக விளங்கியும்; செருக்கின்றி வாழ்ந்தவர். ஏழை எளியவர்களிடம் இரக்கம் கொள்ளும் இளகிய மனம் கொண்டவர். வறியவர்களுக்கு வாரி வழங்கும் கொடையுள்ளம் கொண்டவர்.

நாட்டுக் கோட்டை நகரத்தார் சமூகத்தினரால் – அவர்களாகவே ஏற்றுக் கொண்ட தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

இவரது பக்தி உணர்வும்; அறங்கள் செய்வதில் உள்ள ஆர்வமும் அனைவரையும் இவர்பால் ஈர்த்தன. முத்தையாச் செட்டியார் பிறருக்குத் தொண்டாற்றுவதையே பக்தியாகக் கருதினார்.

சமயத் தொடர்பானவையும்; அல்லாதவையுமான பல அறக்கட்டளைகளை இவர் நிறுவினார்.

சிதம்பரத்தில் குடி கொண்டிருக்கும் நாடராஜப் பெருமானது கோயிலைப் புதுப்பித்து- கூரைக்குப் பொன் வேய்ந்து குட முழக்குச் செய்வித்தார்.