பக்கம்:அலைகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128 O லா.ராமாமிருதம்

 "வேப்பிலைப் பாட்டியின் கோலங்கள் இந்த ஊரில் பார்க்க வேண்டிய காட்சிகளில் ஒன்றுன்னா! கோவில்; கோவிலில் கோலம்!"

மூச்சுத் திணறிற்று. "பாட்டியா? நீங்கள் யாரையோ சொல்கிறீர்கள்!” முட்ட முட்ட மதித்தாலும் முப்பத்தி அஞ்சுக்கு மேல் ஏறாது. பாட்டியாம்! சிறு கோபம் மூண்டது.

‘'ஸ்படிகமா இருக்காளே, அந்த அம்மாதானே?”

இந்த அடையாளத்தை அவனால் தப்ப முடியாது. தொண்டையில் அடைத்த எச்சிலை விழுங்கிக்கொண்டு, தலையை ஆட்டினான்.

“வேப்பிலைப் பாட்டியேதான். என் தகப்பனாரின் கணக்குப்படி ஆனிக்கு அறுபத்திமூணு பூர்த்தி?”

அந்த அதிர்ச்சியிலிருந்து தேற அவனுக்கு அவகாசம் கொடுக்கவோ, அல்லது தானே சிந்தனையில் ஆழ்ந்ததனாலோ, சற்றுநேரம் தாழ்த்தி வீட்டுக்காரர், "வேப்பிலைப் பாட்டியும் இந்த ஸ்தல மகிமையில் சேர்ந்தவள்தான்’ என்றார்.

உள்ளே விசுப்பலகை நொடிக்கிறது. கோமதி எழுந்து உட்காருகிறாள்.

"ஏன் அந்தக் குடும்பமே இந்த ஊரின் பெருமை தான்.”

என் தகப்பனார் சொல்வார். ரங்கசாமி வாத்தியாரைத் தெரிந்தவர்கள். அவர்கள் வீட்டு வாசற்படித் தரை மண்ணைக் கிள்ளிக் கிள்ளி நெற்றியில் இட்டுக்கொண்டே தரை பள்ளமாய்ப் போயிற்று என்று. என் தகப்பனார் ஒரு கவி.

“இன்னிக்கு ஸ்பெஷல் க்ளாஸ் வெச்சேளா? இன்னிக்கு நீங்க முழுசா வீடு போய்ச் சேருவதைப் பார்த்துடறேன். இன்னி ராத்திரி மாமி மடிக்கக் கொடுக்கிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/130&oldid=1288286" இலிருந்து மீள்விக்கப்பட்டது