பக்கம்:அலைகள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168 O லா, ச. ராமாமிருதம்



இந்தப் பக்கம் இன்னும் எட்டு நாளைக்குத் தலை காட்டக் கூடாது-’’

ஏழைங்களைக் காட்டிலும் இருக்கப்பட்டவங்களுக்குக் கரிசனம் கூட; நல்லது எப்பவும் தங்களுக்கு. அதிகத்தை வித்து லாபம் பண்ணிடுவாங்க, கெட்டுப்போனதைப் பிச்சையிட்டு புண்ணியம் பண்ணிடறாங்க. இருக்கப்பட்டவங்கிட்ட எந்தப் பொருளும் வீணாவதில்லே.

“ஏன் சாமியாரே பாதிப்பசி அடங்கிச்சா? இப்ப சொல்லுங்க உங்களுக்கு விரதம், ஏதாச்சும் உண்டா?’’

இவர் என்ன கேக்கறாரு மனுசன் வாயைத் திறந்தாலே என்ன புறப்படுதோன்னு அச்சமாயிருக்குதே!

"சோத்து சமயம் மவுனம் பளக்கமா? நேரம் வாய்க்கும் கைக்கும்தான்; பேசி வீணாக்க இல்லேன்னு எண்ணமா?”

தம்பி முகம் நிழல் தட்டினமாதிரி மாறிட்டுது.

“என்னண்ணா இது? விருந்தாளி இலையிலே சோத்தை வெச்சிட்டு கிண்டல்? இது தருமமில்லே அடுக்காது-’’

“சரிதாண்டா நிறுத்து! நீ பெரிய தருமராசா! தெரியுமே! நாயம் சொல்ல வந்துட்டான். இது தாண்டா சமயம் இலையில் குந்தினதிலிருந்து எழுந்திருக்கும் வரை சாப்பிடறவன் மாட்டிக்கிட்ட ஆள்தானே! சாமியாரே இதைக் கேளுங்க. என் அப்பன் எனக்குப் புத்தி சொல்ற நேரம் சாப்பாடு நேரம் தான். 'என்னடா பெரிய பையா எங்கே போனே? ஏன் போனே; அங்கே ஏன் நின்னே, இங்கே ஏன் குந்தினே? கிழக்கே நின்னியா மேற்கே திரும்பினியா, கண்ணாலமாகி ரெண்டு குட்டிக்கு தகப்பனா பொறுப்பாயிருக்கையா?" வாயிலே வெச்ச சோறு தாக்குத் தாண்டாமலே விஷம்-அடசட் சோறா இது? ஒருநாள் கையை உதறிக் கிட்டு எழுந்தேன். அப்புறம் எட்டு நாளைக்கு நான் பட்ட பாடு அடேயப்பா!"

"அவர் என்னடா! சொல்லு பொறுக்கமாட்டார்; சொந்த வீட்டிலே இருக்கிறதாவா எண்ணம்? மாமனார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/170&oldid=1288557" இலிருந்து மீள்விக்கப்பட்டது