பக்கம்:அலைகள்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இதழ்கள்


கதா வந்துட்டா, வேறே அத்தாட்சியே வேண்டாம். இன்னிக்குக் காலையிலிருந்து வீடு நீர்த்தூளியாறதே. போதாதா? கபாலி டப்பா மாதிரி வீட்டையே தலைகீழாக் கொட்டித்தட்டியாறது. ஈசல்மாதிரி மூலைக்கு மூலைக்கு. அதுக்குள்ளே புகார். வென்னீருள்ளே ஸோப்பைக் காணோம். ஸோப்பு எனக்கென்னத்துக்கு? பொண்ணாப் பொறந்து குப்பை கொட்ட ஆரம்பிச்சதே மொதக்கொண்டு கடலைமாப் பொடிதான். ஆனால் அவருக்கு வேணுமே? வெச்சது வெச்ச இடத்தில் இல்லேன்னா வீட்டை ரெண்டு. பண்ணுவாரே! வாய் கொப்பளிக்கறப்போ 'ஜகதாவே, என்னடி தண்ணி ஸோப்பு நாத்தம் அடிக்கிறதே'ன்னப் போத்தான் பார்த்தேன். பாத்தா, அண்டா அடிலே சோப்புவில்லை கிடக்கு. தாவாரத்து மூலையிலே தொடைப்பம் அவுந்து விசிறியா சரிஞ்சு விழுந்திருக்கு. கையோட்டிப் புள்ளைக்கு முதப் புள்ளை, கொப்புளம் ஊதி ஊதிக் காலாக்கரைச்சிருக்கு.

இதெல்லாம் சரிப்படுத்திட்டு அப்பாடான்னு இடுப்பு நிமிர்ரத்துக்குள்ளே முன் மாதிரி இருக்கா? கூடத்துலே பக்கத்தாத்துக் குழந்தை வீல் வீல்னு கத்தறது. என்னைக் கண்டதும் "ககே-கபே-பாகே-லாப்ளீகா"- ன்னு ஏதோ உளறிக் கொட்டிண்டு ரமேஷைக் காமிச்சு காமிச்சு விக்கி' அழறது. வயிறு தொப்பையெல்லாம் வாயெச்சில், தொப்பமா வழிஞ்சிருக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/261&oldid=1286521" இலிருந்து மீள்விக்கப்பட்டது