பக்கம்:அலைகள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206 O லா. ச. ராமாமிருதம்


பாஷை தான் எல்லாம் தெரிந்த பாஷை, சந்தேகத்தில் தான் அன்பு நெறி மீறிடுகின்றது.

சிக்காமு, நீ போன பின் உன் பல்லவியால் நீ போட்ட கட்டும் விட்டுப் போச்சுடீ! வேலையில் மாற்றிப் போனவன்கள் போக, மற்றவன்கள் ஒரு ஊரிலேயே மூலைக்கொருத்தனாய்க் குடித்தனம் பண்ணாறான்கள். வெளிச்சமாய்ச் சொல்லாமலே என்னை ஆளுக்கு நாலு மாதமாய்ப் பங்கு போட்டுக் கொண்டிருக்கிறான்கள். அவர்களைச் குற்றம் சொல்வதிலும் பேச்சில்லை, உண்ணும் அரிசியை எண்ணி வடிக்கும் இந்த நாளில் ஒரே இடத்தில் ஊன்றிவிட முடியுமா? எல்லோரும் எனக்கு வேண்டியவர்கள் தான். எல்லோரும் நான் பெற்ற பிள்ளைகள் தான். எல்லோரும் என்மேல் பிரியமாய்த்தானிருக்கிறான்கள். ஆனால் நாளைக்கு நான் தாம்பரம் கிளம்பப் போகிறேன். நாலு மாதம் அப்புவிடம் அங்கிருந்துவிட்டு அப்புறம் வில்லிவாக்கத்தில் வெங்கிட்டுகிட்டே. ஆகையால் இன்னும் எட்டு மாதங்களுக்கு இந்த அலைகளிடம் விடை பெற்றுக்கொள்ள வேண்டும். பிறகு, பிழைத்துக் கிடைந்தால், எல்லாம் நல்லபடி நடந்தால் மறுபடி இங்கே வருவேன் சிக்காமு பாஷையில் எல்லாம் இருக்கிறவரையில் தானே! இருக்கிறவரையில் என்பது ஆனால் அலைகள் உங்களுக்கில்லை. நாங்கள் போன பின்னரும் நீங்கள் இருப்பீர்கள்; இங்கு வரண்டாலும் நெஞ்சில் அலைந்து கொண்டிருப்பீர்கள்.

சிக்காமு. நீ முற்றிலும் அறிந்தோ அறியாமலோ இருக்கிறவரை’’ என்று சொன்னதன் பொருள். நீ இருந்தவரை உறைக்காமல், நீ போன பின் என் ரத்தத்தின் .ஏக்கத்தில் உணர்கிறேன்” சிக்காமூ, ஏக்கம் இருக்குடீ! இல்லை என்று எப்படி மறுப்பேன்? ஆனால் உனக்காக என்று சொல்ல முடியுமோ? நீ தெய்வத்துடன் கலந்து விட்டபின் உன்னை எப்படித் தனித்துக் குறிக்க முடியும்? நீ உயிரோடிருந்தாலும், இரத்தத்தின் வெறியில் இந்த சமயம் நமக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/208&oldid=1285366" இலிருந்து மீள்விக்கப்பட்டது