பக்கம்:அவள்.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

402 லா. ச. ராமாமிருதம்

பார்த்தேன். குழந்தையை மடியில் போட்டுத் துரங்கப் பண்ணிக்கொண்டிருந்தாள். இது பெண். நறுவலாகத் தான் இருந்தது. இன்னும் ஆறு மாதம் ஆகியிருக்காது.

என்னைப் பார்த்ததும் புன்னகை புரிந்தாள்.

"என் பெற்றோருக்கு நான் ஐந்தாவது பிறப்பு:" என்றேன். எங்கானும் ஆரம்பிக்கனுமே! முன்பின் பீடிகையில்லாமல், இதுவும் ஒரு 'பாணி'தான், இல்லை?

"அப்படியா? அப்போ தங்கள் குடும்பம்—' சட்டெனக் குழப்பத்தில் அவள் முகம் மாறிற்று. "இல்லை தேவரீர் மூத்தவர்னு அவர்..." என்று இழுத்தாள்.

நான் ஐத்தவாது என்று சொன்னேனே தவிர, எனக்கு முன்னதெல்லாம் தக்கித்து என்று சொல்ல வில்லையே! அப்புறம், திலோமம் பண்ணி, தவங்கிடந்து, விரதமிருந்து ராமேசுவரம் போய் அடியேன் ராமாமிருதம் ஏன் பிறந்தேன்னு இருக்கு."

"அப்படிச் சொல்லக் கூடாது.

அவள் குரல் நடுங்கிற்று.

"தமாஷுக்குக் கூடச் சொல்லக்கூடாது!" என்று மீண்டும் அடித்துச் சொன்னாள்.

நான் தமாஷுக்குச் சொல்லவில்லை என்று அவள் எப்படி அறிவாள்?

"நான் சொல்ல வந்தது அது அல்ல. வேறு. 'நட்டதெல்லாம் பயிரா? பெத்ததெல்லாம் பிள்ளையா?ன்னு அம்மா சொல்வாள். அதையேதான் உன்னிடம் சொல்ல வந்தேன்.”

அவள் புரிந்துகொண்டுவிட்டாள். உடனேயே அவள் கன்னங்களில் வழிந்த கண்ணிர் எனக்குச் சற்று அதிசயமாகத் தானிருந்தது. ஆனால் நான் விடவில்லை. தொடர்ந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/446&oldid=1497381" இலிருந்து மீள்விக்கப்பட்டது