பக்கம்:அவள்.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

376 லா. ச. ராமாமிருதம்

கார். என்னைப் பார்த்துத் தலையைத் திருப்பிக்கொண்டார். எனக்கும் அப்படித்தானிருந்தது. இப்படியிருக்க அவருக்கென்ன தலையெழுத்தா? ஏன் அப்படியிருக்கார்?"

சொல்பவர்க்கென்ன?

"இமயமலைச்சாரலில் ஒரு பனிக் குகையில், அவதூதராகப் பார்த்தேன்.”

முன்னால் இந்த ஆசாமி, இமயமலைச் சாரலில் பனிக் குகைக்குப் போக என்ன நிமித்தம்?

யார் கேட்பது?

ஆனால் அப்பா, நீங்கள் வரமாட்டீர்கள். ஏனெனில் நீங்கள் சுயநலக்காரர்.

நேரம் நகர்ந்தது. குறுகிய சீசாவுள் மணலின் மெது மெதுச் சரிவு,

டிபன் ரூமில். என் டிபன் டப்பாவைத் திறந்ததுமே புளிப்பு வாடை என்னையே பின்வாங்கச் செய்தது.

"என்ன ப்ரதர், தயிர்சாதமா...கள்ளுலே பிசைஞ்சு கொடுத்தாங்களா?”

அவசரமாய் டப்பியை மூடினேன்.

“Leave him alone!” இவளுக்கு என்மேல் ஏன் இவ்வளவு பரிவு தானம்?

"ஹாஸ்டலில் என்ன கட்டிக்கொடுத்தாங்களோ அதைத் தானே கொண்டார முடியும் எங்கே ஏந்திருச்சிட்டிங்க? உக்காருங்க. எங்கேயும் போவேணாம். இன்னிக்கு நீங்க நம்ம கெஸ்ட். நான் டிபன் காரியர்லே கொணந்திருக்கேன். காரியர் சாப்பாடு எப்பவும் மிஞ்ச மிஞ்சத்தான்— ஏன் தயங்கறீங்க... இன்னிக்கு விஜ் தான். முள்ளங்கி சாம்பார், உருளைக்கிளங்கு புட்டு. ப்ளீஸ், எனக்காக...சத்தியமா நீங்க நினைக்கறது இல்லே-எங்களுக்கும் பாவ புண்ணியம், வெள்ளிக்கிழமை உண்டு.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/420&oldid=1497274" இலிருந்து மீள்விக்கப்பட்டது