பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கித்திய பாராயணத்துக்குரிய பாக்கள் 1. கந்தரநுபூதி விநாயகர் அருள் பெற 'ஆடும்பரி, வேல், அணி சேவல் எனப் பாடும் பணியே பணியாய் அருள்வாய் ! தேடும் கயமா முகனைச் செருவில் சாடும் தனியான சகோதரனே! வினை நீங்க கெடுவாய் மனனே கதிகேள் ! கரவா(து) இடுவாய் 1 வடிவேல் இறைதாள் நினைவாய்! சுடுவாய் நெடுவேதனை துாள்படவே விடுவாய், விடுவாய், வினை யாவையுமே! காலனை எதிர்க்க கார்மா மிசை காலன் வரிற், கலபத் தேர்மா மிசை வந்தெதிரப் படுவாய்! தார் மார்ப வலாரி தலாரி எனும் சூர்மா மடியத் தொடு வேலவனே! மறு ஜென்மம் பெருமலிருக்க மாஏழ் சனனம் கெட மாயை விடா மூவேடனை என்று முடிந்திடுமோ ? கோவே! குறமின் கொடி தோள் புணரும் தேவே சிவசங்கர தேசிகனே ! பாத தரிசனம் பெற கைவாய் கதிர்வேல் முருகன் கழல் பெற்(று) உய்வாய், மனனே! ஒழிவாய் ஒழிவாய்; மெய் வாய் விழி நாசி யொடும் செவியாம் ஜவாய் வழி செல்லும் அவாவினையே. சகல காரிய சித்தி பெற உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே !