பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அநுபந்தம் 3 25 to திருப்புகழ் யாவராலும் கொண்டாடப் படுவதற்கு ஒரு முக்கிய காரணமாயிருக்கின்றது. சிவபிரானைப் பற்றிய துதிகளைப் பார்த்தால் சிவனடியார் வேறு யாரும் அதற். கிணையாகப் பாடினரில்லை எனத் திடம்பட உரைக்கலாம். உதாரணமாக-1177 புருவத்தை என்னும் பாடலைப் பார்க்க. தேவியைக் குறிக்கும் தோத்திரங்களோ அதியற். புதமாக இருக்கின்றன. தேவியின் அடியார் வேறு எவ ரும் இத்தகைய அற்புத வகையில் ஏத்தினரில்லை. இதற். குக் காட்டு தேவேந்திர சங்க வகுப்பு ஒன்றே போதும். புத வேதாள வகுப்பின் தொடங்கும் பகுதியும் படித்து மகிழத் தக்கது. அங்ங்னமே திருமாலின் துதிகளும், திரு. மால் அடியார் ஒருவரும் அருணகிரியாரைப் போலத் திருமாலின் பெ ரு ைம பலவற்றையும் அடுக்கடுக்காக அமைத்தாரில்லை. இதற்குக் காட்டாகச் சீர்பாத வகுப்பு, வேல் வாங்கு வகுப்பு இவற்றின் ஈற்றடிகளைக் கண்டு நாம் மகிழ்வோம். வாக்குக் கருணகிரி ' என்னும் சிறப்பு கம்மா வருமா? திருப்புகழ்ப் பாக்களின் பெரும்பாலான வற்றின் பிற்பாதிகள் வள்ளியின் பொருட்டுச் செய்த லீலை கள், சூரசங்காரம் ஆதிய முருகன் திறலையும், சிவபிரான்: தேவி, திருமால் ஆகிய கடவுளரின் சிறப்பையும் எடுத்து ஒத, முற்பாதிகள் ஆசிரியரின் குற்றங்களைக் கூறி இத் தகைய புல்லனையும் பொருட் படுத்தி என்றருளுக என் றும், ஏன்றருளினையே என்றும் எடுத்துரைக்கும். இத் திருப்புகழ்க் கடலின் சாரத்தை எழுத வேண்டின் அது ஒரு தனி நூலாகும்; ஆதலால் திருப்புகழ்ப் பாக்களின் பொதுக் கருத்து எது; முக்கிய உபதேசம் எது என்பதை மட்டும் கூறுவோம் ; (i) பொதுக் கருத்து பொது மகளிரின் மாயையிற் சிக்காது எனப் புரந்தருளுக : யமன் வருங் காலத்து நீ மயில்மீது வந்து எனக் காத்தருளுக ; யாக்கை நிலையா தது, அருவருப்புக்கு இடமாயது ; ஆதலால் பிறப்பற உனது அடியார் கூட்டத்தில் என்னையும் சேர்த்து உனது திருவடி நிழலைத் தந்தருளுக-என்பதே.