பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 அருணகிரிநாகர் சத்தியம். நான் கடைசியாக உண்டது தேவர்களுடன் பார் வதி கலியானத்தின் போது: என்பசிக்குத் தகுந்தவாறு நீ அமுதளித்து, விருந்து செய்து, பாக்கு, வெற்றிலை கொடுத் துச்சுகமாய் இருப்பாயாக. (iii) அடி 73 முதல் 96 வரை: முருகவேளது பெரு மைகளைக் கூறி மேற் சொன்ன சித்தர்களினும் மேம்பட்ட பிரசித்த சித்தர் முருகவேளின் திருப்புகழைக் கற்றவர்என முருகன் திருப்புகழ்ப் பெருமையை எடுத்துக் கூறும் இச்சித்து வகுப்பு. (iv) அடி 73-74. தருண சந்த்ர ரேகை விரவு மன நாறு பாதார விந்த...மாதா”-தேவியின் தாளில் இறைவன் வணங்குவதால் இறைவன் முடியிலுள்ள திங்களின் மனம் தேவியின் திருவடியிற் கமழுகின்றது-என்ருர். திங்கட் பகவின் மணநாறுஞ் சீறடி-அபிராமி யந்தாதி-35 குறிப்பு : 'நமச்சிவாய வாழ்க’ என்னும் திருமந்திரத் தொடு திருவாசகம் தொடங்குவது போல அடல் புனைந்த வேலுமயிலும் என்றும் வாழி' என்னும் திருமந்திரத் தொடு இந்த சித்து வகுப்பு தொடங்குவது கவனிக்கற் பாலது. 17. கடைக்கணியல் வகுப்பு முருகவேளின் மயில், அவர் திருக்கை வேல், அவர் கடைக்கண் பெருமை-ஆக இம் மூன்றையும் நாம் தியானிப் போம்-வாருங்கோள்-என உலகோர் யாவரையும் அழைத்து அங்ங்ணம் அவை தமைத் தியானஞ் செய்வதால் இன்ன இன்ன பேறுகள் கிடைக்கும் என்பதை இவ்வகுப்பால் விளக் குகின்ருர் சுவாமிகள். அடி 3. என்றும் பெற்றடையத் தக்கதான முத்தி, செந்தமிழ் (இவையிரண்டும் கிடைக்கும் படியான) திருவரு 2ளப்பெற நினைந்து அங்ங்னமே அவை சித்திக்கப் பெறலாம். கிடைக்கப் :ெசறலாம் முத்திக்கும், செந்தமிழ்க்கும் என்பன முத்தியையும் செந்தமிழையும் அருளாற் பெற-என்றபடி