பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாராய்ச்சிப் பகுதி (திருவகுப்பு] 18 2. தேவேந்திர சங்க வகுப்பு இவ்வகுப்பிலுள்ள தேவி துதிபோல گیID)دلا با فاری تونداریع வாய்ந்த தேவி துதி தமிழ் நூல்களிற் காண்பது அரிது. (i) முதலடி. இரணிய சம்மாரஞ் செய்த திருமாலே தேவி (பார்ப்பதி) என்பதைத் தெரிவிக்கின்றது. இது "அரியலால் தேவியில்லை ஐயன் ஐயாறனுர்க்கே’, ‘காவியங் கண்ணளாகிக் கடல்வண்ண குகிறின்ற தேவியைப் பாகம் வைத்தார் திருப்பயற் று.ாரணுரே எனவரும் அப்பர் தேவாரக் கருத்தது. (ii) தாதாம்புய...பரம்பரை-தாது- அம்புய-பரம்பரை. 'அம்புயமேல் திருந்திய சுந்தரி-அபிராமியந்தாதி. (iii) உலகு எழுகடல் நிலைபெற வளர் காவேந்திய பைங்கிளி -காவு-காவுதல். முதனிலைத் தொழிற் பெயர். காவு=சுமத்தல். (iv) முருகனை அருள்பட மொழிபவர் ஆராய்ந்து வணங்குவர் தேவேந்திர சங்கமே -இதற்குத் தேவேந்திர சங்கம் முருகனை அருள்பட மொழிபவ(ரை) ஆராய்ந்து வணங்கும் - என அந்வயப்படுத்தித், தேவேந்திர சங்கத் தார் முருகனை அருள்பட மொழிபவர் யாரென ஆராய்ந்து (தேர்ந்தெடுத்து) அவரை வணங்குவர் எனப் பொருள் கொள்ள வேண்டும். மொழிபவர் ஆராய்ந்து' என்பதற்கு “மொழிபவரை ஆராய்ந்து’ எனப் பொருள் காண வேண் டும். உதாரணமாகச் சம்பந்தன் பத்தும் வல்லார் விண் ணுலகம் எதிர்கொள்ள விரும்புவரே " - (பிரமபுரம் - III-56-11) என்ற இடத்து சம்பந்தரது பத்தும் வல்லாரை விண்ணுலகத்தார் எதிர்கொள்ள விரும்புவரே ! எனப் பொருள் காணுதல் போல. இங்ங்ணம் அடியார்களைத் தேவர்கள் நாடி விரும்புவர் என்பதற்கு-ஆலவாயில் அண் சானலைத் தீய தீர எண்ணுவார்கள் சிந்தை யாவர் தேவரே” (III-52-11) என்னும் சம்பந்தர் தேவாரமும் சான்ரும். , ா