பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாராய்ச்சிப் பகுதி (பாராயணமுறை) 235. தக்கபடி ஒதிக், கந்த் ரலங்காரத்தில் பக்கம் 159ல் காட் டிய பன்னிரண்டையும் அல்லது ஏதேனும் ஒன்றை ஒதிக்க கந்த ரநுபூதியில் (பக்கம் 173-ல் காட்டிய ஆறு பாடல் களையும் அல்லது ஏதேனும் ஒன்றை ஒதிக், கந்தரந்தாதி யில் சேயவன் புந்தி என்னும் 48-ஆவது பாடலை ஒதிப் பின்னர் தேவசேன, வள்ளியம்மை, வேல், மயில், சேவல், நவவீரர், அருண கிரிநாதர், திருப்புகழ் அடியார்கள் இவர் களை ஒவ்வோர் பாடலால் துதித்தோ, பாடல் கூருது தியா னித்தோ, இறுதியாக ஆறிரு தடந்தோள் வாழ்க’ என்னுங் கந்த புராணச் செய்யுளைச் சொல்லித் துதித்துப் பாராய ணத்தைப் பூர்த்தி செய்தல் வேண்டும். ஆறு திருப்பதித் தியான பலன் இங்ங்னம் ஆறு திருப்பதிகளையும் நித்தம் தியானிப்ப தால் வரும் பயன் இன்னதென விளக்குவாம். (1) திருப்பரங்குன்றத்தைத் தியானிப்பதால் (பரம்= சிரேஷ்டமான; குன்றம்=உயர்நிலை) மேன்மை வாய்ந்த உயர்நிலையை நாம் அடையலாம். (2) திருச் செந்துார் என்பது அலைவாய்த் தலம்-இத் தலத்தைத் தியானிப்பதால்-அத்தலத்திற் கடலலை கரை யில் மோதி ஒய்வது போலவும், அங்ங்ணம் ஒயும் இடத்தே இறைவன் திருக்கோயில் கொண்டுள்ளது போலவும்-நமது மனதில் எழுகின்ற எண்ணங்கள் ஒய்ந்து மன அமைதி கூடும்; அங்ங்ணம் கூடுமிடத்து இறையொளி தோன்றும். (பக்கம் 93 பார்க்க). (3) திரு ஆவினன் குடியைத் தியானிப்பதால்-நமது ஆவியில் முருகன் நன்ருக எழுந்தருளிக் குடிகொள்ளு வான். ஆவியுள் நீங்கலன் ஆதி மூர்த்தி’ என்னும் சம் பந்தர் திருவாக்குக்கு (III-105-3-கலிக்காமூர்,-இலக் காகுவோம். (4) திரு ஏரகத் தியானத்தால்-நமது அகம் (உள் ளம்) ஏர் (அழகு, தூய்மை) பெற்று (இறைவன் குடிகொள் ளத்தக்க இடமாய்) விளங்கும்.