பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாராய்ச்சிப் பகுதி (வேண்டுகோள்கள்) 227 (3) அன்பொடு நினைக்க : "உனது பொற்சரணம் எப்பொழுதும் நட்பொடு நினைத்திட அருட் டருவாயே’. (திருப். 672) (4) அடியார் இணக்கம் பெற : அடியார்க்குத் தொண்டு செய: (i) அசட அநாசாரனை அவலனை ஆபாசனை அடியவிட்ரோடாள்வதும் ஒருநாளே. (திருப். 583) (ii) நிலைபெறு ஞானத்தாலினி உனதடி யாரைச் சேர்வதும் ஒருநாளே. (திருப். 1273) (iii) கூள னெனினுமென நீ யூனடியரொடு கூடும் வகைமை யருள் புரிவாயே. (திருப். 121) (iv நின்னை யுணர்ந்து உருகிப் பத்மக் கழல் சேர்வார்தம் குழாத்தினில் என்னையும் அன்பொடு த வைக்கச் சற்றுக் கருதாதோ. (திருப். 492) (v) உனக்கடிமைப் படுமவர் தொண்டு புரிவேனே, (திருப்.245) (wi) மறவாதுன் நாமம் புகழ்பவர் பாதந் தொழஇனி நாடும்படி யருள் புரிவாயே. (திருப்.1038) (5) நோய் நலியாதிருக்க : நோய்கள் பிறவிகள் தோறும் என நலியாதபடி உனதாள்கள் அருள்வாயே.(திருப்.260) (6) அவா அடங்க : யான் அவா அடங்க என்று பெறுவேனே (திருப்.739) 17) வேண்டத் தக்க தறிவோய் நீ : இறைவா எதுதா அதுதா. (திருப்.834) (8) யமபயம் நீங்க : 'அந்தகனும் என யடர்ந்து வருகையினில் அஞ்சல் எனவலிய மயில்மேல் நீ-அந்த மறலியொ டுகந்த மனிதன் நமதன்பன் என மொழிய வருவாயே (திருப்.70)