பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாலாற்றப் பகுதி 61. மயக்கில் ஈடுபட்டு அவர்கள் பொருட்டுப மபாருவ தேடுவதிலேயே நான் அவப்பொழுது போக்கிக் கொண்டி ருந்த சமயத்தில் என்னைத் தவப்பொழுது போக்க வைத்து வீடுபேறு அருளிய பெருமானே! உன் கருணை யை மறவேன்! 'திருச்சிராப் பள்ளி மலைமிசை நிலைபெறு பெருமாளே! கபடிகள்...இடையினும் நடையினும் அவமேயான் மயக்கமாய்ப்பொருள் வரும்வகை க்ருவழிபணு தடத்து மோகூடிம தருளிய பலமலர் மனத்த வார்க்கழல் கனவிலு நனவிலு மறவேனே!' என நன்றி பாராட்டி யுள்ளார். "பதினுன்கு சாத்திரங்களில் ஒன்று உமாபதி சிவம் இயற் றிய சிவப்ரக்ாசம். இதற்கு மதுரைச் சிவப்ரகாசர் ஒரு உரை கண்டனர். அவ்வுரையின் சிறப்புப் பாயிரத்தில் 'ஒது புகழ் சகாத்தம் ஆயிரத்து நானூற் ருெருப்தின் மேற் செல்கின்ற காலந் தன்னில் மாதுபுயில் மதுரை யில் வாழ் சிவப்பிரகாசன்...திதில் சிவப்பிரகாசச் செய் யுள் நூறுந் தேர்ந் துரையிட்டே உலகிற் சிறப்பித் தானே” என்பதிலிருந்து இவ்வுரையின் காலம் சாலி வாகன சகாப்தம் 1410-1488 A.D. என்று ஏற்படுகின், றது. இவ்வுரையில் பத்தாம் சூத்திரம் முதற் பாடல் 'பொற்புறு கருவி யாவும்” என்று தொடங்குவதில் தத் துவம் முப்பத்தாறும் நீங்கியே முத்தி என்பதற்குக் கோயிற் புராணத்தில் 'தரை முதல் ஆரு றென வரும் நாதாதியின் மீத்ே” என்றும், திருக்கிளிற்றுப் படியா ரில் 'நாதாந்தத்தே இருப்பர்’ என்றும், திருப்புகழில் 'விந்து நாத ஒதுைக்குத் தூரமானது' என்றும் வரும் ஏதுக்களைக் கண்டுகொள்க என்ற பகுதியே திருப்புகழ்ப் பாடல் ஒன்றை எடுத்துக் காட்டுவது. வாசித்துக் காணுெ ணுது எனத் தொடங்கும் பாடலில் மேலே காட் டப்பட்ட ஏது வருகின்றது. இதிலிருந்து 1488-ம் ஆண்டிலே (திருப்புகழ் பாடப்பெற்ற காலம் 1450 கி. பி. எனப்படுதலால், 38 ஆண்டுகட்குள்ளே) சித்தாந்த சாத்திர உரையில் எடுத்துக் காட்டக்கூடிய பெருமை திருப்புகழுக்கு இருந்தபடியால் திருப்புகழ் எவ்வளவு விரைவில் கற்ருேரால் பாராட்டப்பட்டது. என்பது புலப் படுகின்றது”