பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாசகர் சிவபிரானிடம் உபதேசம் பெற்றது போல அருணகிரியார் முருகவேளிடம் உபதேசம் பெற்ருர். இங் ங்ணம் அருணகிரியார் ஒருவரே எம்பிரான் முருக வேளுக்கு நால்வராய்த் திகழ்ந்தனர் என்க. பின்னும், சம்பந்த மூர்த்தி போலப் பதிருையிரம் பாடல் தாமும் பாடியும், தேவாரம் போல இசைத்தமிழாம் திருப்புகழை யும், திருவாசகம் போன்று செந்தமிழ்ச் சுவை சொட்டும் கந்தரலங்காரத்தையும், திருக்கோவையார் போன்ற அகப்பொருள் துறைகள் விளங்கும் கந்த ரந்தாதியையும் பாடித் தமிழ்ப் பா வேந்தாக அருணகிரியார் பொலிவுற்ற னர்; இன்றும் பொலிகின்ருர்; இனி என்றும் பொலி வார். அவர் பாடிய திருப்புகழாதிய நூல்களும் முற். கூறியபடி (பக்கம் 215) நால்வர் பாடிய பாடல்களின் நல. மெலாம். அமைந்து வாக்குக்கு இலக்கியமாய், எ ன் றும் அழியா வனப்புள்ளனவாய் விளங்குகின்றன. XVII. அருணகிரிநாதரும் திருமூல நாதரும் அருணகிரிநாதருக்கும் அறுபத்துமூன்று நாயன் மார்களுள் ஒருவரான திருமூலநாதருக்கும் சிறந்த ஒற் றுமை நயங்கள் பலவுண்டு. இருவரும் இறைவனிடம் திருவடி திகூைடி, சகூடி திகூைடி பெற்றவர்கள்: நாதன் என்னும் பட்டம் பெற்றவர்கள்: மெய்ஞ்ஞானப் பெரி யார்கள்; தவ முதல்வர்கள்; கருணையாளர்கள்; இருவ ரும் வேதாகம சாரத்தைத் தமிழ் நூல் வாயிலாக உலகுக்கு. அளித்து உதவினவர்கள். இருவரும் இறைவனைப் பெறு வதற்காகவே தமிழ்ப் பா பாடினர்கள். (கந்த ரநுபூதி 17-ஆம் பாடற் குறிப்பைப் பார்க்க-பக்கம் 175). திரு. மூலர் தமது உடலைவிட்டு ஆயன் உடலிற் புகுந்த பின்னர் மந்த்ர நூலாகிய திருமந்திர நூலைப் பாடினர். அருணகிரி யார் தமது உடலைவிட்டுக் கிளியின் உடலிற் புகுந்த பின் னர் மந்த்ர நூலாகிய கந்தரநுபூதி நூலைப் பாடினர். திரு மந்திரத்திலுள்ள பல சொற்களையும் கருத்துக்களையும் கந்த ரலங்காரத்திற் காணலாம். பிற ஒற்றுமை நயங்க எளின் விவரங்களை எல்லாம் யான் எழுதியுள்ள 'திரு.