பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாராய்ச்சிப் பகுதி (கந்தரலங்காரம்) 159 1வண்டும் என்றும் எண்ணுதற்கு இடம் இருக்கின்றது. காரணமாக, முதற் பாட்டில் பிரபஞ்சம் என்னும் சேற் கறைக் கழிய வழிவிட்டவா என ஆச்சரியப்பட்ட பிறகு 4-ஆம் பட்டில் செய்வ தென் யான்? எனக் கலங்குவதற்கும் 7ஆம் பட்டில் உளத்திற் ப்ரமத்தைத் தவிர்ப்பாய் என வேண்டு தற்கும் அவசியமில்லை. ஆதலால், அருணகிரிநாதருக்குப் புரனை அருள் நிரம்புவதற்கு முன்பு பாடப்பட்டன. சில, t I, I) фрог அருள் நிரம்பின பின்பு பாடப்பட்டன பிற-என நி%னக்கவேண்டி யிருக்கின்றது. நூறு பாடல்களுக்கு மேற் காணும் காப்புச் செய்யுளும் ஆறு தனிச் செய் யு ள் க ளு ம் நூலைத் தொகுத்த போது நூற்றுக்குமேல் எஞ்சிநின்ற செய் யுள்கள் போலும். இந்த ஏழு செய்யுள்களின் வாக்கு அருண கிரி நாதரது வாக்கெனவே திகழ்கின்ற அருமையது. இக் கந்தரலங்காரம் சிறந்த ஒரு பாராயண நூலாகும். இதைக் கிருத்திகை தோறுமேனும் பாராயணஞ் செய்வது உத்தம மாகும். எங்கள் திருப்புகழ்ப் பதிப்பிற் கூறியபடி 16. தடுங்கோள் 70. விழிக்கு 47. பத்தித்திரு 33. முடியா 38. நாளென் 23. தெய்வத் 76. கோடாத 86. வேலாயுதன் 39. உதித்தாங் 60. சிந்திக்கிலேன் 27. ஓலையும் 84. மைவரும் என்னும் பன்னிரு பாடல்களை நித்ய பாராயணமாகக் கொள்ளலாம். இனி எங்கள் பதிப்பிற் கந்த ரலங்கார ஆராய்ச் வியில் இல்லாத ஒருசில விஷயங்களை ஈங்கெடுத்துக் குறிப் பாம். காப்புச் செய்யுள் (அடலருணை) : வட அருகிற் சென்று கண்டுகொண்டேன்-வட அருகில் உள்ள முருக மூர்த்தியே முதற் திருப்புகழுக்கு முத்தைத் தரு’ என்னும் அடி எடுத் துக் கொடுத்தவர். இவரே அருணகிரியாரை ஆட்கொண் ருளிய கோபுரத் திளையனுர்’ என வழங்கும் முருகவேள். '. அருணை ஆடகச் சித்ரமணிக் கோபுரத்து உத்தர திக்காக வெற்றிக் கலபக் கற்கி யமர்வோனே (திருப். 577) அருணை யிறையவர் பெரிய கோபுரத்தில் வடபால் அமர்ந்த அறுமுகப் பெருமாளே. (திருப். 540)