பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 அருணகிரிநாகர் வெருட்டும் ; (3) மனத்தை1 (நெஞ்சக் கனகல்லை) உருக்கி அழிக்கும், (4) ஆசை, ஆணவம் என்னும் பூட்டுக்களி னின்றும் விடுவிக்கும் , (5) பிறவிக் கடலைக் கடக்கும் , (6) போரிற் பகைவரை அற்புத வகையில் வெருட்டி ஒட் டும் (கடகம்=சேனை2); (7) இருவினைகளையும் கழல (நீங்க) வைக்கும்; (8) யோகிகளின் களைப்பை நீக் கும் : (9) பல கவலைகளையும் அழிக்கும் : (10) இறைவனது கருணைத் திருவருளையே கவளமாக மொக்கும் (திருவருளி லேயே திளைக்கும் என்றபடி); (11) காமனை வெல் லும் : (12) சகல மாயைக் கோட்டைகளையும் அழிக்கும்; (13) கோபத்தி அவியும்படிப் பொறுமைப் ப்ரவாக நதியைப் பெருக்கும் : (14) லோபத்தையும் மோகத்தையும் அழிப்பிக் கும்; (15) மதம் என்னும் மரத்தின் வேரைப் பறித்தெறி யும் (16) ராஜதம்3 ஆதிய முக்குண மதில்களை இடித் தழிக்கும் ; (17) எண்ணிறந்த அறிவுக் கலைகளை விசி அளிக்கும் : (18) திருத்தணிகேசரது திருப்புகழைப் பாடும் நாவலர் கூட்டம் பிரியப்படும்படி அவர்களுக்கு இனிது அருள்பாலிக்கும். 11. திருக்கையில் வழக்கம் இவ்வகுப்பு திருத்தணிகேசரது திருப்புகழைப் படிப் பவர்க்கு அப்பெருமானது திருக்கையால் அளிக்கப்படும் ப்ரசாத மகிமையைக் கூறுவது. அடி 13-14. வினைப்பகை செகுப்பவன்' என்பது நினைப்புடை மனத்தவர் வினைப் பகையு நீயே" என்னும் சம்பந்தர் திருவாக்கை (II-30-6) நினைவூட்டுகின்றது. 12. வேடிச்சி காவலன் வகுப்பு அடி 4. சத பத்ரம் என்னும் சொல்லுக்கு மயில் என் றும், தாமரை” என்றும் பொருள் உண்டு. 1. அடி 3. 'புகர் மனக்கிரி தனை முருக்குவ' என்றும் பாடம்; அடி 11-ல் மதம் பின்னும் வருகின்றதால் 'மனக்கிரி' என்பதே சரியான பாடம். 2. அடி 5. அப்படி ஒட மோதுவ’-என்றும் பாடம். 3. அடி 11. ராச தாமத' என்றும் பாடம்.