பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அநுபந்தம் 3 255 தாரணி குழல் வள்ளி எனக் குறிப்பாய் வெளியிடுகின் ருர். பத்தித் துறையில் இழிந்து ஆனந்த வாரியில் படிந் தேன் ; அப் பரமானந்த சாகரத்தில் அறுமுக வேளைப் பன் னிரு புயனைக் கண்டேன், கண்டேன் எனக் குதுாகலிக்கின் ருர். உலகோர்க்கும் எழுத்துப் பிழையற அன்புடன் முரு கன் துதிப் பாக்களைக் கற்பீர்களாக; மனத்தை நிலைப்படுத்து விர்களாக, வெகுளியை விடுவீர்களாக, தானஞ் செய்வீர் களாக, இருந்தபடி (சாந்த நிலையில்) இருப்பீர்களாக, நொய்யளவேனும் வறிஞர்களுக்கு உதவுவீர்களாக, 'யான் டதான்' என்னும் செருக்கை. அழிப்பீர்களாக, முருகனைஅவன் வேலை - மறவாதீர்கள் - போற்றுங்கள், வாழ்த் துங்கள் -என உபதேசிக்கின்ருர். இந்நூலுக்கு உயிர் நிலைப் பாடல்கள் : நாளென் செயும் (38), விழிக்குத் துணை' (70) என்பன. (5) கந்த ரநுபூதி சாரம் தமது குறைகளை எடுத்துக் கூறியும், தாம் தவ நிலை யால் பெற்ற பேற்றினை எடுத்து ஒதியும், தாம் அடைந்த மெளன நிலையின் பெருஞ் சிறப்பை எடுத்துக் கூறியும், நான் பெற்ற இன்பத்தை நீங்களும் வழி பாட்டால் பெற்று உய்யுங்கள் என உபதேசித்தும் அருணகிரியார் உலகை உய்விக்கும் நூல் கந்தரநுபூதி. இந்நூலுக்கு உயிர் நிலைப் பாக்கள் ஆடும்பரி (1), கெடுவாய் மனனே (7) என் பன. இந்நூலின் அருமை பெருமையைக் கண்டுனர்ந்த பெரியார் தாயுமானவர் என முன்னரே கூறினுேம் (பக்கம் 172). பிறிதொரு பெரியார் முருகன் உகந்து வீற்றிருக் கும் இடங்களாகக் கூறின ஒன்பதில் அருணகிரியாரின் அநுபூதி யும் ஒன்று. அந்த இடங்கள் : (1) பார்வதி தேவி வின் கைத்தலத் தாமரை (2) சிவபிரானது நெற்றிக் கண் (3) கங்கை (4) சரவணம் (5) அருணகிரியாரின் வாக்கு, (6) அவர் அடைந்த அநுபூதி (7) மறைச்சிரம் (8) அறிவா னந்தம் (9) தமது நெஞ்சக்கல்-என அருமையாக விளக்கு கின்ருர். அச் செய்யுள் வருமாறு :