பக்கம்:அவள்.pdf/524

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

480 லா. ச. ராமாமிருதம்



அம்முகத்தில், லேசாக லஜ்ஜையின் திட்டு, நான் கதவைத் திறந்திருந்த இடைவெளிக்குள் உடம்பை இடுக்கிக்கொண்டு உள்ளே வந்தார். 'கையில் என்ன? ஆ. How Strange! ஒரு ஆட்டம் போடுவோமா?'

'இது எந்த சாமிக்கு வேண்டுதலை? எந்தக் காரிய சித்திக்குக் காணிக்கை: ஸ்னானம் ஆச்சா, இனிமேல் தானா?”

எனக்கு ஒரு பக்கம் சிரிப்பு; கூடவே வெறுப்பு. இதென்ன கோணங்கித்தனம்? ஆனால் ஆசாமி இடிச்ச புளி, ஏதோ காரணம் இருக்கணும்.

ஸ்னானம் பண்ணலாம். ஆனால் முன்னால் ஒரு தாயக்கட்டான் போடலாம்...'

'அதுக்கென்ன அவசரம்? ஸ்னானம் கூட பண்ணாமல்?’’

என்மேல் படாது; என் கை தம்ளரைப் பிடுங்கிக் கொண்டு, உடனே தாழ்வாரத்தில் உடகார்ந்து கட்டானை வரைய ஆரம்பித்துவிட்டார். நானும் எதிரே உட்கார்ந்தேன். திடீரென இவரிடம் ஒரு ஈர்ப்புசக்தியை உணர்ந்தேன்.

'உன் கையில் தாயக்கட்டையைப் பார்த்தவுடன் என் தலையையும், நம் தலைவிதியையும் இணைத்த ஏதோ ஒரு சேதியை-நம்மை மீறிய சக்திகள் அனுப்பியிருக்கும் சேதியைப் படிக்கிறேன்-'

கேலியில் என் கீழ் உதடு சுருண்டது; 'என்னைச் சினிமாப் பித்துனு கேலி செய்வதில் குறைச்சலில்லே. ஆனால் எனக்குக்கூட இப்படி ஒரு சினிமா டயலாக் தோணாது!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/524&oldid=1497575" இலிருந்து மீள்விக்கப்பட்டது