பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 அருணகிரிநாதர் 225 எனுமுப தேசம் ஈந்தனை போற்றி தனிவழி நடக்கும் தருணம் வேல்மயில் எனச்சொலி நடக்கஎன் றியம்பினை போற்றி முத்தி வேண்டினுேர் முருகனற் பதத்தில் கருத்தைப் புகட்டின் கடிதிற் பெறலாம் 230 எனுமறை மொழியை இசைத்தனை போற்றி கொள்களின் கொடுமை குலைகுலைந் திடவே 'சேயவன் புந்தி’ எனுந்திருப் பாவை உலகுக் களித்த ஒருவ போற்றி தும்மும் போதெலாம் குமர சரணம்’ எனச் சொலும் வழக்கம் ஏற்படின் உய்தி 소 3 5 பெறலாம் என்ற பெருமைய போற்றி பிறவிக் கடலிற் பிடிபடா திருக்க விரும்பினுல் முருகன் மேதகு நாமம் புகலுக என்று புகன்றனை போற்றி 240 புந்திக் கிலேசமும் காயக் கிலேசமும் போக்க விரும்பினுேர் புனித மூர்த்தியாம் முருகனை மறவா முறை சிந் திக்க பொய்யை நிந்திக்க உண்மை சாதிக்க என எடுத் துரைத்த ஏந்தலே போற்றி 245 தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானம் இடுங்கோள் தவரு தென்றும் இருந்த படியே இருங்கோள் என்ற பேருப தேசம் பேசினை போற்றி கதிபெற வேண்டின் கரவா திடுக 250 கருதுக வடிவேல் இறைதிருக் கழலை எனக்குறிப் பிட்ட எந்தாய் போற்றி வாழி வாழி என மற வாது பரவிடின் சரண பங்கயம் தருவன் முருகன் என்று மொழிந்தனை போற்றி 255 சிற்றடிப் பெருமையைச் செப்பினை போற்றி வேலின் பெருமையை விளக்கினை போற்றி வேல்வாங்கு திறத்தை விரித்தனை போற்றி