பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 97. (xix) 99. வெஞ்சரோருக-அடி7. கங்கை மாமதி: சார் ப.து பிழை. கங்கை மாதவி என்பதே திருத்தமான | lா 1. (xx) 54: 'இன்பமும்’-இது சுவாமிகள் வாக்கல்ல; திருப்புகழ் அல்ல ; சுவாமிநாத தேசிகர் பாடிய திருச்செந் ஆார்க் கலம்பகத்தில் உள்ள ஒரு பாடல். திருப்புகழ்ச் சந் ஆக்கில் இருக்கவே யாரோ திருப்புகழ்ப் பாடல்களுடன் இதைக் கலந்து விட்டார்கள். ஆதலால் இந்தப் பாடலை ந்தையார் பதிப்பித்த திருப்புகழ் முதற். பாகத்திலிருந்து, க%ாந்து விட வேண்டும். இங்ங்னம் பிற்காலத்தார் பாடின பாடல்கள் பல பழைய திருப்புகழ் ஏடுகளில் கலந்திருப்பதைக் கண் கூடாக நான் கண்டிருக்கிறேன். திருநெல்வேலிப் பிர தேசத்தில் வெவ்வேறு இடங்களில் கிடைத்த திருப்புகழ் வட்டுப் பிரதி இரண்டில் இராமாநுஜதாசர் பாடிய ஆாற் றெட்டுத் திருப்புகழுள் ஒன்ருகிய உடைச் சே2லதா: கன்னும் பாட்டு அருணகிரியாரது பாடல்களுடன் கலந்து கிடந்தது. ஒரு திருப்புகழ் ஏட்டிற் புலவர் புராணம் பாடிய முருகதாச சுவாமிகள் பாடிய பாடல்கள் பன்னி ன்டு (புதுவைத் திருப்புகழ்) கலந்து கிடந்தன. இவை :மைக் கண்டு அஞ்சித் தான் எந்தையார் திருப்புகழ் முதற் பாகம் முதற் பதிப்பின் முகவுரையில் இவ்வளவு காரம் ஆராய்ச்சி செய்து ஒழுங்கு படுத்தியும் பாடல்க ளெல்லாம் அருணகிரிநாத சுவாமிகள் திருவாக்கிலிருந்து வந்தபடியே கலப்பு இல்லாமல் இருக்கின்றன என்று சொல்லத் துணிந்திலன்-என எழுதியுள்ளார்கள். இதே காரணத்தால் தான் சுவாமிகளது சரித்திரத்தைத் துணிந் தெழுதுவதில் சில பாடல்கள் சந்தேகத்தை மிகவும் விளைவிக்கின்றன. ஆயினும் உண்மையை உள்ளத்தில் இயக்கும் வண்ணம் முருக பிரானப் பிரார்த்தித்து அவர் திருவருளையே துணையாகக் கொண்டு இவ்வாராய்ச்சி நடைபெறுகின்றது. நிற்க-சுவாமிகளது தல யாத்திரை யைக் கவனிப்போம். 1-7هـ