பக்கம்:அலைகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130 O லா. ச. ராமாமிருதம்


அப்படி ஒரு சக்தி அந்த மனுஷனிடம் இருந்ததென்று கேட்டால் இப்போக்கூட எனக்குச் சொல்ல வரல்லை. அது உடலோடு பிறந்த மகிமை. முக்திக்கு முன் இத்தனை என்று விதித்திருக்கும் பிறவிக் கணக்கைக் கழிச்சு எடுத்த ஒரு ஜனிப்பு.

இதுகூட என் தந்தையின் பாஷைதான்.

‘ரங்கசாமி வாத்தியார் ஒரு மகாபுருஷன்' என்று சொல்லிவிட்டு உடனேயே என் தகப்பனார், 'புருஷன்' என்கிற பதத்திற்கு முப்பது-பிரிவினை, ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாகப் பதினெட்டு பொருள்கள், சில சந்தர்ப்பங்கள், சான்றுகள் காட்டி மகிழ்வார். என் தகப்பனார் தமிழ் வாத்தியார் மட்டுமல்ல; சமஸ்கிருத பண்டிதர்கூட.

'ஸாரு'ம் மாமியும் எப்போது இந்தி ஊருக்கு வந்தார்கள். போயும் போயும் இங்கு தானா வரணும்? அவருடைய மேதைக்கு இன்னும் எவ்வளவோ பதவியில் அவர் இருக்கலாமே?

எங்களுக்குள்ளேயே இந்தக் குமைக்சல்களுக்குப் பதில் கிட்டியதேயில்லை. 'ஸாரை'க் கேட்க யாருக்குத் தைரியம்?

ஒரு தடவைகட தபால்காரன் அவர் வாசற்படியை மிதித்ததில்லை மாமியோ மாமாவோ சேர்ந்தோ தனியாவோ விடு முறையென்றோ விசேஷமென்றோ ஊரை விட்டுப் போனதில்லை. மாமிக்கும் மாமாவுக்கும். உற்றார், உறவினர், மாற்றுமுகம், எல்லாம்-தங்களுக்குத் தாங்களே: ஒருவருக்கொருவர் சிறைப்படவுமில்லை.

எனக்கும் உனக்கும்
நமது நமது என
எதை
எனக்கு எனக்கெனக் கொண்டோமே
ஆனாலும்
உன்னிலும் என்னிலும்
உன்னையும் என்னையும்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/132&oldid=1288288" இலிருந்து மீள்விக்கப்பட்டது